உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுபாசு சந்திர போசு

|| 87

இந்தியத் தலைவரையும்விட அவர் பேரளவில் ஒற்றுமை சாதித்ததற்கான வழி.

தன்மதிப்புணர்ச்சி

சுபாஷின் வாழ்க்கையில் எவரும் காணத் தவறாத பெருஞ் சிறப்பு அவர் தன்மதிப்புணர்ச்சி ஆகும்.

'மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயர்நீப்பர் மானம் வரின்’

என்ற வள்ளுவர் வாக்குக்கு இலக்கியம் வேண்டுமானால் ரஜபுத்திர வீரர் கதைகளில் பார்க்க வேண்டும்; அல்லது காந்தியடிகள், போஸ் வாழ்க்கைகளைப் பார்க்கவேண்டும். காந்தியடிகளின் சமய உணர்ச்சிகளால் அவர் வாழ்க்கையில் இச்சிறப்பைப் பலர் கவனிக்க முடியாமல் போய்விடுகிறது. ஆனால் போஸ் வாழ்க்கையில் இதனைத் தெளிவாகக் காணலாம். அலிப்பூர்ச் சிறை நிகழ்ச்சி, ஹிட்லர் கறுப்பரைப் பற்றிப் பேசியதன் கண்டனம் ஆகியவற்றில் இதனை முந்துறக் காணலாம். இத் தன்மதிப்பை நிலை நாட்டுவதில் அவர் காட்டும் துணிச்சல் உண்மையிலேயே எவரையும் அதிர வைக்கத் தக்கதாகும்.

காந்தி வழியுணர்ந்து நடந்தவர்

போஸ் வாழ்வில் எவரும் காண நினைக்காத, எதிர்பாராத சிறப்பு ஒன்று உண்டு. அஃது அவர் காந்தியடிகளின் சிறப்புக்களையும் அவர் காட்டிய வழியின் நன்மை தீமைகளையும் வழுவற உணர்ந்து நடந்து கொண்டவர் என்பதாம். ‘காந்தீயம்’ என்ற புகழ்க் கொடியின் கீழ்த் தங்கள் சிறு தன்னலங்களையும் குறைகளையும் பலர் மறைத்துக் கொள்கின்றனர். இத்தகையோரைக் காந்தீயத்தின் நண்பர் என்பதைவிடப் பகைவர் என்று எண்ணல் வேண்டும். ஆனால் போஸ் இந்தியாவின் எந்தப் பெரியாரையும் குறை கூறுபவர் அல்லர். காந்தியடிகளையோ அவர் இந்தியாவின் தந்தை என்றே கொண்டனர். மனித உருவில் கடவுள் என்று ஒன்றைப் போஸ் நம்பியிருக்கக் கூடுமாயின் அது காந்தியே என்று அவர் ஒப்புக்கொண்டிருப்பார். ஆனால் ஒருவர் பெருமையை ஒப்புக் கொள்வது என்பது அவர்களைப் புகழ்ந்து