உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




210 ||

அப்பாத்துரையம் 11

அன்று சிந்து ஆற்றைப் புண்ணிய ஆறாகவும், சிந்துவெளியைப் புண்ணிய நிலமாகவும் (ஆரிய பூமி, புண்ணிய பூமி, பிரமதேசம்), தற்காலம் ஆப்கானிஸ்தான் எல்லையிலிருக்கும் தட்சசீலத்தைப் புண்ணிய நகரமாகவும் கொண்டாடினர். கங்கை வெளியை ஆரிய திராவிடக் கலப்பினத்தவரின் திருந்தாமொழிப் பகுதியாகக் கருதி இழித்துரைத்தனர். ஆனால், பாரத காலத்தில் யமுனைக் கரையும், இராமாயண காலத்துக்குள் கங்கைக் கரையுமே ஆரிய நாகரிகத்தின் தலைமை யிடங்களாயின. இக் காலத்திலே புராணங்கள் இயற்றப்பட்டனவாதலால் அன்று முதல் இன்றளவும் சிந்து ஆறு புண்ணிய ஆறு என்பது மறக்கப்பட்டுக் கங்கை ஆறே புண்ணிய ஆறாகவும், சிந்து வெளியாகிய பாஞ்சாலமே பழைய பிரமதேசம் அல்லது ஆரிய பூமி அல்லது புண்ணிய தேசம் என்பது மறக்கப்பட்டு, கங்கை வெளியே புண்ணிய நிலமாகவும், தட்சசீலமே புண்ணிய நகரம் என்பது மறக்கப்பட்டுக் காசியே புண்ணிய நகரமாகவும் கருதப்பட்டு வருகின்றன.ஆயினும் அதன்பின் கோதாவரியிலும்,காவேரியிலும், வைகைக் கரையிலும், தாமிரவருணிக் கரையிலும் தங்கிய பிராமணர்தாம் திராவிட நாட்டில் புதிதாக வளர்த்த பண்பாட்டையே ஆரியப் பண்பாடாக்கி, அதைக் காசிவரை பரப்பினர். காவிரி தலைசிறந்த புண்ணிய ஆறாகவும், காஞ்சி தலைசிறந்த புண்ணிய நகரமாகவும் ஆயின. நகரங்களில் சிறந்த நகரம் காஞ்சி (நகரேஷு காஞ்சி) என்ற பழஞ் சொல் காளிதாசன் காலத்திலேயே (கி.பி. 5ஆம் நூற்றாண்டிலேயே) புதிய ஆரியத்தின் பழஞ் சொல்லாகிவிட்டது. புதிய ஆரிய சமயத்தின் எல்லா ஆச்சாரியரும் தென்னகத்திலேயே பிறந்து காஞ்சியை வாழ்வகமாகவோ பயிற்சித் தளமாகவோ ஆக்கிக்

கொண்டிருந்தவர்களே என்பதை யாவரும் அறிவர்.

இன்றும் சிந்துவெளிப் பிராமணரைவிடக் கங்கைவெளிப் பிராமணர், அவர்களைவிடக் கோதாவரி, காவிரி, தண் பொருநைக் கரைப் பிராமணரே பிராமண சமுதாயத்தில் பண்பாட்டிலும் அறிவிலும் திறமையிலும் தலை சிறந்தவர்களாக விளங்குகின்றனர்.

பிராமணர் உயர்வுக்குக் காரணம் அவர்கள் ஆரியக் குருதியோ, ஆரிய மரபோ, ஆரியப் பண்பாடோ அல்ல. அவர்கள்