உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




21. தமிழ்ப் பண்பும் ஆரியப் பண்பும்

இன வேற்றுமை காட்டாத தமிழரின் இனப் பண்பு, அதாவது திராவிடப் பண்பு மொழி கடந்து, ந்து, இனங்கடந்து, தேசங்கடந்து செயலாற்றவல்லது. ஆனால், இன வேற்றுமையே பண்பாகக் கொண்ட ஆரியப் பண்பு அவ்வினத்துக்கே கேடும் பழியும் சூழ்வது. இதனைத் தமிழகப் பிராமணர் நிலையும் காந்தியடிகளாரின் வாழ்க்கையுமே மெய்ப்பித்துக் காட்டவல்லன.

தமிழகத்திலும் சரி, தமிழகத்துக்கு வெளியேயுள்ள பிற தென்னகப் பகுதிகளிலும் சரி - பிராமணர் அறிவிலும் நாகரிகப் புறப்பண்பிலும் வாழ்க்கைத் தரத்திலும் மற்ற தென்னாட்டவரைக் காட்டிலும் உயர்ந்த நிலையுடையவராகவே விளங்குகின்றனர். இங்கே அவர்கள் ஆட்சியினத்தில் மிகப் பெரும் பங்கு உரிமையு டையவர்களாக, கிட்டத்தட்ட ஆட்சியினமாகவே இயங்கு கின்றனர் என்பதும் தெளிவு. இதனால் அவர்கள் தற்பெருமை கொண்டு, தம் உயர்வுக்கு ஆரியக்குருதி - ஆரியப் பண்பாடுதான் காரணம் என்று கருதி அந்த ஆரிய இனத்தையும் ஆரியப் பண்பாட்டையுமே வளர்க்க அரும்பாடுபடுகின்றனர். ஆனால், அவர்கள் ஒரு சிறிது சிந்தனைக்கு வாய்ப்பளித்தால், இந் நம்பிக்கையின் பொருந்தா முரண்பாடு தெற்றென விளங்கும்.

பிராமணர் உயர்வுக்கு ஆரியக் குருதியோ, ஆரியப் பண்பாடோ, ஆரிய மரபோ காரணமென்று கொள்வதானால், சிந்து ஆற்று வெளிப் பிராமணர் கங்கைவெளிப் பிராமணரிலும் கோதாவரிக் கரைப் பிராமணர் காவிரிக் கரைப் பிராமணரிலும் மேம்பட்டவராயிருத்தல் வேண்டும். பண்டோ இன்றோ அத்தகைய நிலை இருந்ததாக இருப்பதாக யாரும் கூற முடியாது. வேதகாலந்தொடங்கிப் பாணினி காலம்வரை வடக்கே இந்நிலை இருந்ததென்பது உண்மையே. ஆனால், இது பிராமணர் நிலையல்ல, ஆரியர் நிலை மட்டுமே. சிந்து ஆற்றுவெளி ஆரியர்