உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(208

அப்பாத்துரையம் - 11

விரும்பி உண்ணும் மரப்பலகை (சப்பாத்தி)யையும் அறவே மறந்து, மென்மை வாய்ந்த தமிழுணவே உண்டு அவர்கள் தமிழரினும் மெல்லியவர்கள் ஆய்விட்டனர்.

மற்றவரினும் முனைப்பாக - மற்ற அயலினங்களைப் போலவேதான் தமிழக ஆரியரும் முற்றிலும் தமிழராய், தமிழ் நாகரிகத்தைப் பாரதமெங்கும், உலகெங்கும் பரப்பும் தூதராய் விளங்குகின்றனர்.

-

ஆனால், தென் திசைத்தேனை உலகெங்கும் வாரியிறைத்த- இறைத்து வரும் இதே தமிழக ஆரியர் அல்லது பிராமணர் வடதிசை ஆலகாலத்தையும் - வருணாசிரம இன வேறுபாட்டை யும் தமிழகத்தில் ஊறச் செய்து, அதன்பிடியை இன்னும் வலுப்படுத்தவே வடதிசைப் பிற்போக்கு நாகரிகத்துடன் முற்போக்குடைய தென்னகத்தைக் கட்டிப்போட விழைகின்றனர். எப்படியோ முற்றிலும் அவர்கள் கையில் சிக்கிவிட்ட கல்வி, செய்தி பரப்பி நிலையங்களை எல்லாம் இன வேறுபாட்டு முறை, சாதி வருண முறை, மூடநம்பிக்கைகள் பரப்பும் 'அழகுச் சைத்தான் கலை நிலையங்க' ளாக்க அரும்பாடுபட்டு வருகின்றனர்.

தென்னகப் பிராமணர் தமிழர் நாகரிகத்தில் மேம்பட்டு விளங்கும் அளவுக்குத் தென்னகப் பண்பிலும், தமிழ்ப் பண்பிலும் ஊறி, இன வேறுபாடற்ற தமிழர் தனி வாழ்வுரிமைக்குப் பாடுபட்டு, தமிழினத்தைத் தம் மூலதனமாக்கி உலகுக்கு ஒளிதரப் பாடுபடும் நாள் விரைவில் வர வேண்டும். அந்நாள் வரப் பாடுபடும் பிராமணரே வருங்கால உலகில் உலக நாகரிகத்துக்குப் புது வாழ்வு தந்த பிராமணராகப் போற்றப்படுவார் என்பதில் ஐயமில்லை. மற்றெல்லாம் வகைகளிலும் வளமும் உரமும் வாய்ப்பும் மிக்க தமிழகத்தை அடிமைப்படுத்தி உள்ளூர நின்றரித்துவரும் ஆரியத்தை, பாரத தேசிய நோயை, உலகின் முதலாளித்துவ முறைக்கெல்லாம் மூலவேராயுள்ள நச்சுப் பண்பை அகற்ற அவர்கள் பாடுபட்டால், தென்திசை மீண்டும் உலக நலனில் பங்கு கொண்டு அதை மீண்டும் புதுவாழ்வு நோக்கி வளர்க்கும் வளர்ப்புப் பண்ணையாக இயங்கி விடும்.

அந்நிலைக்கு உழைக்க இளைஞர் நங்கையர் - பார்ப்பன ளைஞர், நங்கையர் - முன் வந்து, தமிழ்ப் பண்பின் புது வளத்துக்கு இன்னும் ஒரு சான்று அளிப்பரா?