உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இதுதான் திராவிட நாடு

(211

திராவிடப் பண்பாட்டுத் தொடர்பே என்பதை இது தெள்ளத் தெளியக் காட்டுகிறது.

தென்னாட்டில் அவர்கள் பெற்ற தலைமை நிலைக்குத் தென்னக அரசரும் செல்வரும் மக்களும் அவர்களுக்கு அளித்த தனிச் சலுகைகளே காரணம் என்பதையும் இதே நிலை விளக்குகிறது. ஏனெனில், பிராமணருக்கும் ஏனைய நாட்டு மக்களுக்கும் இடையே தென்னகத்தில் உள்ள மலைமடுவான வேற்றுமை வடதிசையில் பொதுவாக, சிந்துவெளியில் சிறப்பாக, இல்லாத ஒன்று. மற்றும் ஒரு செய்தியும் இதை வலியுறுத்திக் காட்டுகிறது.

தென்னகத்திலும் ஆந்திரம், தமிழகம், மலையாளம், கன்ன டம் ஆகிய நான்கு பகுதிகளிலும் அவர்களுக்குத் தரப்பட்ட சலுகைகள் வேறுவேறு வகைப்பட்டவை. தமிழகச் சலுகைகளில் சமயச் சார்பான மக்கட் சலுகை மிகுதியானாலும், அதனிலும் அரசர், செல்வர் ஆகிய ஆட்சி வகுப்பினர் அளித்த அரசியல் சலுகை, கல்விச் சலுகையே மிகுதி. அதனால் அவர்கள் அடைந்த உயர்வும், அறிவு வகுப்பு, ஆட்சி வகுப்பு என்ற முறைப் பட்டதாகவே பெரிதும் இருந்து வருகிறது. ஆந்திர நாட்டில் அவர்கள் பெற்ற சலுகை பெரிதும் சமயச்சலுகை மட்டுமே. அவர்கள் உயர்வும் தேற்ப உற்ப ஆட்சி வகுப்பு, அறிவு வகுப்பு என்ற அளவில் பெரு மதிப்படையவில்லை. மலையாள நாட்டிலும் அதன் வடதிசைக் கன்னடப் பகுதியிலும் (அதாவது பழைய சேர நாட்டிலும்) அவர்களுக்குச் சமய, சமுதாய உயர்வும் நிலப்பண்ணை முறைசார்ந்த உயர்வும் அளிக்கப்பட்டன. இதனால் இங்கே பிராமணர் அரசியல் அறிவுவகுப்பாகவோ ஆட்சி வகுப்பாகவோ அமையாமல், கலைவகுப்பாகவும் சமய ஆட்சி வகுப்பாகவும், நிலச்செல்வ ஆட்சி வகுப்பாகவும் (ஜன்மிகள் அல்லது ஜமீன் வகுப்பாகவும்) நிலவுகின்றது.

சமண சமயம் நீண்ட காலமும் வீர சைவ சமயம் அதன் பின்னும் நிலவியிருந்த கன்னட குசராத்து நாடுகளிலும் தமிழக வைணவம் பரவிய மராத்தி வங்கநாடுகளிலும் பிராமணர் இவ்வளவு எளிதாக உயர்வு பெற முடியாமல், மற்ற ஆட்சி வகுப்பினருடன் நீடித்துப் போராடி வந்துள்ளதும் இன்னும் வடதிசையில் ஆட்சி வகுப்பினரை அண்டி வாழ்பவராகவோ