உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இதுதான் திராவிட நாடு

(227

மயமான ஆரியர் மற்ற ஆரியர் உரிமை கெடுத்துத் தாழ்த்தக் கூடக் கூசுவதில்லை. ஐயங்கார் - ஐயர் சண்டை, ஐயங்கார்களுக்குள் வடகலை, தென்கலைப் போராட்டம், ஆதிக்க மொழியாகிய இந்திக்குள்ளும் சமஸ்கிருத மயமான இந்தியா, தாய்மொழி இந்தியா என்ற வாதம் ஆகியவை அதற்குச் சான்றுகள்.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இறுதியில் மனிதரையே கடிக்கும் வேட்டை நாய்களைப் போல, இந்தி முதலில் திராவிட இன மொழியாகிய தமிழைக் கடிக்கப் புறப்பட்டு, பின் முஸ்லிம் இந்தியாகிய உருதுவையும், காந்தியடிகள் இந்தியாகிய இந்துஸ்தானியையும், இறுதியில் இப்போது ஆரிய மொழி களாகிய வங்காளி, பஞ்சாபி, மராத்தி ஆகியவற்றையும் கடிக்கத் தொடங்கியிருப்பதும் இதே உண்மை காட்டும்.

ஆகவே ஆரிய திராவிட இனவேறுபாடு, பிறப்படிப்படை யான, நாட்டடிப்படையான ஒரு வேறுபாடுமட்டுமன்று, பழக்க வழக்க அடிப்படையான தேசிய வேறுபாடுமட்டும் கூட அன்று. அது ஒருபண்படிப்படையான வேறுபாடு ஒன்றுக்கொன்று நேர் எதிரான குறிக்கோள்களையுடைய ஒரு முரண்பட்ட வேறுபாடு. திராவிட நாடு பிரிந்து தனித்து வாழ்வதால் ஏற்படும் நன்மை திராவிட நாட்டுத் தேசிய வாழ்வின் நலம் மட்டுமன்று. அந்த நலம் திராவிட நாட்டில் திராவிடப் பண்பைத் தங்குதடையின்றி வளரச் செய்வதால், அப்பண்பலைகள் ஆரிய நாட்டையும் வளப் படுத்தும் தன்மையுடையவையாகும். திராவிட நாட்டில் திராவிடனைச் சுரண்டுவது நின்றுவிடும். அதுமட்டுமன்று, ஆரிய நாட்டிலும் ஆரியன் ஆரியனைச் சுரண்டும் இன்றைய நிலை அதன்பின் நீடித்திராது.

ஆரியர் விரும்பும் ஆரிய திராவிட ஒற்றுமை ஆரிய திராவிட உயர்வு தாழ்வை அடிப்படையாகக் கொண்டது என்பதைக் கீழ்திசை, மேல் திசை வேற்றுமை தெள்ளத் தெளியக் காட்டும். ஆரிய திராவிட வேறுபாடும், அதில் உயர்வு தாழ்வு கற்பித்துப் ‘போலி ஒற்றுமை' வளர்க்கும் ஆரியப் பண்பாடும் இன்று திராவிட நாட்டிலும் உண்டு; ஆரிய நாடாகிய வட நாட்டிலும் உண்டு. ஆகவேதான் இந்த இரண்டு நாடுகளிலும் அக்கிரகாரங்கள் உண்டு. அம்பட்டனும் உண்டு. ஆரிய திராவிட வேறுபாடோ, அதன் அடிப்படையில் ஏற்பட்டுள்ள ஆரிய