உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




228) ||— —

அப்பாத்துரையம் - 11

ஒற்றுமையோ இல்லாத இங்கிலாந்தில், பிரான்சில் அம்பட்டன் உண்டு. அக்கிரகாரம் கிடையாது. அது மட்டுமல்ல. அம்பட்டன் ஒரு தொழிலாளி. அவன் பிறக்கும்போதே அம்பட்டனல்ல. அவன் உறவினரெல்லாம் அம்பட்டரல்லர். ஆரிய திராவிட வேறுபாட்டின் அடிப்படையாக ஆரியம் நிலவும் திராவிட நாட்டிலும் ஆரிய நாட்டிலுமே அக்கிரகாரம் ஓர். இனமாகவும் அம்பட்டன் அதனுடன் படைப்புக்கால முதல் ஊழி முடிவு வரையும் தொடர்பற்ற மற்றோரினமாகவும் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆரியம் வாழும் இடத்தில் ஒரு நாடல்ல, ஓர் ஊர், ஒரு தெரு, ஒரு வீடுகூட இன வேறுபாடற்ற ஓரினமாக வாழ முடியாது.எக் காலத்திலேனும் அக்கிரகாரம் ஒரு தனி இனமாக வாழ வேண்டும் நிலை ஏற்பட்டால், அது வாழ முடியாது. வண்ணான் இருக்க முடியாது. அம்பட்ட இனத்தில் பிறந்த ஒருவனும் வண்ணான் இனத்தில் பிறந்த ஒருவனும் புதிதாகப் பிரமதேவனால் படைக்கப்பட்டுத்தானாக வேண்டும். அது போலத்தான் வேளாள இனம், வீர இனம், வணிக இனம், தட்டார் இனம் எல்லாம் கடவுளே படைத்து அவர்களுக்கு அனுப்பியாக வேண்டும்.

திராவிடம் நாகரிக அடிப்படையாக, வரலாற்று அடிப் படையாக ஓர் இனம். ஆரியம் அதுபோன்ற இனம் வகுக்க வில்லை. திராவிடம் ஒரு தேசிய இனமாகி அதனடிப்படையில் ஓருலகில் பங்கேற்று, ஓருலகை வளர்க்க முடியும். ஆரியம் ஒரு நல்ல உலகையோ, தேசியத்தையோ அல்ல, ஒரு நல்ல சமுதாயத் தையோ, ஊரையோ, குடும்பத்தையோகூட அமைக்க முடியாது.

பிராமணப் பெண்கள் மட்டும் தங்கள் கல்வியறிவைத் தம் இனம், பெண் இனம்பற்றிய சிந்தனையில் செலுத்தத் தொடங்கி, 'ஆரிய' ஆராய்ச்சியில் இறங்கிவிட்டால், பிராமணக் குடும்பங் களே நடைபெற முடியாது.ஏனென்றால், பிராமணப் பெண்களை யெல்லாம் ஆரிய நாகரிகம் சூத்திரர்கள் என்று கருதி, பஞ்சமரில் ஆடவர்களை மதிக்கும் அளவுகூட, நம்பும் அளவுகூட நம்புவதில்லை. தம்பி, தந்தை, கணவன்மார்கள், அண்ணன் தம்பிமார்கள், பிள்ளைகள் தம்மை ஆண் விலங்குகளுக்குக் கூடச் சமமாக மதிக்கவில்லை, நம்பவில்லை என்பதை அவர்கள்