உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இதுதான் திராவிட நாடு

229

காண்பர். அதுமட்டு மோ? தாம் வணங்கும் தெய்வங்களில் கூட, பெண்ணுருவான தெய்வங்கள், பார்வதி, இலக்குமி, சரஸ்வதி, இந்திராணி ஆகியோர் பஞ்சமரில் ஆண்களைவிடக் கீழாக மதிப்பிடப்பட்டு இழிக்கப்படுவது காண்பர்.

சமஸ்கிருத நாடகங்களில் தேவர்களும் தேவர்களுடன் உறவாடும் ஆரியப் புரோகிதர்களும் அரசர்களும் வீரர்களும் தேவ மொழியாகிய சமஸ்கிருதத்தில் பேசுவதாக நாடகக் கவி ன் காட்டுகிறான். சூத்திரர்களாக வரும் நாட்டு நகர மக்களும் பணிமக்களும் மனித மொழிகள் அல்லது பாகதங்களில் அதாவது அந் நாளைய பாலி முதலிய மனித உலகில் வழங்கிய தாய் மொழிகளில் பேசுவார்கள். ஆனால், பெண்களைப் பற்றிய வரை இதே தாய்மொழிகளில்தான் வேலைக்காரப் பெண்டிரும் சரி, பணிப்பெண்கள், பாங்கியர்களும் சரி, அரசியரும் சரி பேசவேண்டும். எம்பிராட்டி, சீதை, உலக அன்னை பார்வதிகூடச் சூத்திரருடன் சூத்திர மொழியில்தான் பேச வேண்டும்.

வைதிக தருமத்தில் பிராமணர் முதலிய உயர் வருணத்தில் பிறந்த ஆணுக்குக்கூடப் பிறப்பில் தீட்டு உண்டு. அவன் சூத்திர னாகப் பிறப்பதாகத் தான் சாத்திரங்கள் கருதுகின்றன. பிறந்த வீட்டுத் தீட்டுச் சூத்திரச்சியாகிய தாய் வயிற்றில் பிறந்த தீட்டே. ஆனால், தீட்டு முழுதும் உபநயனத்தின்போது வேத மந்திரங் களால்தான் தீரும். அதுவரை அவன் பிராமணர் முதலிய உயர் வருணத்தில் பிறந்திருந்தாலும், சூத்திரச்சி வயிற்றில் பிறந்த சூத்திரனேயாவான். அதன் பின்தான் பெண் வயிற்றில் பிறந்த பாவத்தை, இழிவை அவன் வேத மந்திரங்களால் போக்கி, பிராமணனாக வாழ்கிறான்.

பெண்ணுடனே வாழும் இல்லறத்தை ஆரியம் வெறுப் பதற்கும் ‘சம்சார பந்தம்', ‘உலக மாயை' என்று தலையிலடித்துக் கொள்ளுவதற்கும் உள்ள அடிப்படைக் காரணத்தை அறிந்த எந்த பிராமணப் பெண்ணும் ஆரியருடன் வாழ ஒருப்பட மாட்டாள். ஏனென்றால், நாள்தோறும் பெண் பேயைத் தொட்டு ஊடாடுவ தால்தான் இல்லறம் தீது துறவறம் நன்று என்று கூறப்பட்டது. நாள்தோறும் இரவில் பெண் பேயுடன் கூடிய தொடர்பை நீக்கத் தான் காலைக் குளியல் வைதிகருக்கு இன்றியமையா ஆரியக் கடனாகிறது!