உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




27. ஏன் ‘திராவிடம்’? சொல்லாராய்ச்சி

இதுவரை நாம் கூறிய விளக்கங்கள் ‘ஆரியராவது திராவிடராவது' என்று கூறும் ஆரியருக்கே, அறிஞருக்கே கூறப்பட்டவை ஆகும். தமிழகத்துக்கு வெளியேயுள்ள அறிஞர்களுக்கும் இவ்விளக்கங்கள் பயன்படுக்கூடும். ஆனால்,, தமிழகத்துக்குள் இவ்விளக்கங்கள் பெரும்பாலும் தேவைப்பட மாட்டா.திராவிட இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம், நாடு நகரெங்கும், பட்டிதொட்டி எங்கும் அறிஞர் அண்ணா அவர்களின் அறிவார்ந்த அழகு விளக்கங்களாலும், அவர் இளவல்கள், நங்கையர்கள், பிற அறிஞர்கள், கலைஞர்கள், கவிஞர்களின் பேருரைகள், கட்டுரைகள், கலைத் தொகுதிகளாலும் இவையாவற்றையும் பொதுமக்கள் உள்ளங்களிலே, வீட்டுத் தாய்மார் உள்ளங்களிலே கூடப் பசுமரத்தாணி போல் பதியவைத் துள்ளன. ஆனாலும் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வெளியே இன்னும் உலவ இடம் கிடைக்கும் இடங்களில், வேளைகளில் - விளக்கம்தர முடியாத போதுகூட அறிவுக் குழப்பம் தரும் முறையில் சிலர் பலர் பேசுகின்றனர்.

திராவிடமா, அது என்ன மொழிச் சொல்? தனித் தமிழ்ச் சொல்லா? சமஸ்கிருதச் சொல்லா? இலக்கியத்தில் அதற்கு வழக்கு உண்டா? வடவர் சொல்லையா தமிழர் வழங்குவது? திராவிடர் என்றால் ஓடி வந்தவர், போக்கிரிகள் என்றல்லவா பொருள்? அதை விட்டுவிட்டுத் ‘தமிழன்’ ‘தமிழ்நாடு' என்று சொன்னாலென்ன?

இக்கேள்விகளுக்கு விளக்கங்கள் அடிக்கடி மேடைகளில், பத்திரிகைகளில் தரப்பட்டும், கேள்விகள் கேட்கப்பட்டுக்கொண் டேதான் இருக்கின்றன. இதற்கு ஒரு காரணம் உண்டு. 'கோல்டுஸ் மித்' என்ற ஆங்கிலக் கவிஞரின் ‘பாழ்பட்ட ஊர்' என்ற கவிதையில் ‘தோற்றுவிட்டாலும் விடாது வாதாடும்' ஒரு