உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




124

அப்பாத்துரையம் - 7

பேராசிரியர் பதவியைவிட முழு நேர ஆராய்ச்சியே அவருக்கு ஏற்றது என்பதை அவர்கள் கண்டனர்.வான்ட்ஹாஃவ் (Vandhoff) என்ற இயங்கியலறிஞர் உயிர் நீத்தபோது அத்தகைய ஒரு பணியிட ஒழிவு ஏற்பட்டது. அதை ஏற்றுப் பெர்வின் வரும்படி அவர்கள் ஐன்ஸ்டீனை வற்புறுத்தினர்.

ஐன்ஸ்டீன் குடும்பவாழ்வில் இப்போது மனக்கசப்பு வளர்ந்து வந்தது. அவருக்கும் திருமதி ஐன்ஸ்டீனுக்கும் வரவர மனம் ஒத்துக் கொள்ளவில்லை. திருமதி ஐன்ஸ்டீன் அவரை விட்டுப் பிரிந்து மண உறவுப் பிரிவினை கோரிக் கொண்டிருந்தார். இடமாற்றம் மனத்துக்கு ஓரளவு அமைதி தரும் என்றெண்ணி ஐன்ஸ்டீன் 1914-ல் பெர்லின் அழைப்பை ஏற்றார்.