6. அமெரிக்கா
காலம் என்று ஒரு தனி அளவை கிடையாது. இடம் என்று ஒரு தனி அளவை கிடையாது. காலமும் டமும் ஒரே அளவையின் இரண்டு கூறுகள். இரண்டும் சேர்ந்து கால- இடம் என்ற ஒரே அளவை ஆகும். இதுவே ஐன்ஸ்டீனின் தொடர்புறவுக் கோட்பாட்டின் அடிப்படை உண்மை. ஐன்ஸ்டீனின் வாழ்க்கைப் பண்பை நோக்கினால், அவ்வாழ்வுகூடக் கால பண்பற்றதோ என்று கூறத் தோன்றும்.
இடப்
அவர் பிறந்த இடம் ஜெர்மனி. பிறந்த காலம் ஹிட்லர் ஆதிக்கம் நோக்கி ஜெர்மனி வளர்ந்த காலம். ஆனால், ஜெர்மனி அவரைப் புறக்கணித்தது. ஜெர்மனியின் காலப் பண்பு அவரை அலைக்கழித்தது. அவர் கால இடங்கடந்த உலக அறிஞராகவே புகழ்வானில் மிதக்க வேண்டியதாயிற்று. ஆயினும் கால இடப் புணைகளற்று மிதந்த அவர் புகழ்வாழ்வுக்கு, அமெரிக்கா அவ் விரண்டையும் அளித்து, அவர் வாழ்வை நம் உலக வாழ்வுக்கு வளந்தரும் பயிராக்கிற்று என்னலாம்.
பெற்றதாயும், உற்றதாயும்
-
ஜெர்மனியின் ஆழ்ந்த பண்புகள், இருபதாம் நூற்றாண்டின் சிறப்புப் பண்புகள் அவர் வாழ்க்கைப் பண்பில் இடம்பெறவில்லை என்று கூறமுடியாது. அவர் உள்ளப் பயிர் வேரூன்றிய நிலமும், உரமும், நீரும் அவையே. ஹிட்லர் கெய்ஸர் - பிஸ்மார்க் காலங்களுக்கு முந்திய பழைய ஜெர்மனி உலக அறிவு, உலகக் கலை ஆகியவற்றில் தோய்ந்த நிலமேயாகும். வாக்னர், பீதவன் ஆகியவர் களின் இசை, ஷில்லரின் ஆழ்கலைப் பண்பு, கெதேயின்' அகலக் கலைப்பண்பு ஆகியவற்றில் அவர் ஈடுபாடு மற்றெந்த ஜெர்மானி யருக்கும் பிற்பட்டதன்று. அறிவியல் கலைத்துறைகளில் இருபதாம் நூற்றாண்டுவரை ஜெர்மனி