உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




5. ராச்செஸ்டர் வருகை

என் புதிய வாழ்வில் நான் அமைந்து தட்டுத் தடங்கலெது வுமில்லாமல் இனிதாக மிதந்து சென்றேன். திருமதி ஃவேர்ஃவக்ஸின் அன்பு ஒருபுறம்: அடேலின் கள்ளங் கபடமற்ற பாசம் ஒருபுறமாக என்னைக் களிப்பில் ஆழ்த்தின. இந்நிலையில் மூன்று மாதங்கள் மூன்று நாட்களாக கழிந்தன.

அடேலுக்கு ஒருநாள் நீர்க்கொண்டுவிட்டது. அதனால் அவளுக்கு அன்று ஓய்வு அளிக்கும்படி திருமதி ஃவேர்ஃவக்ஸ் என்னை வேண்டினாள். என்னிடம் அங்ஙனம் வேண்டிக் கொண்ட நயநாகரிக முறைக்கு இணங்க நானும் நயநாகரிக மாக நடக்க விரும்பினேன். திருமதி ஃவேர்ஃவக்ஸின் கடிதங்களை வழக்கமாகப் பணியாள் நகரத்து அஞ்சல் நிலையம் சென்று போடுவது வழக்கம். "இப்போது எனக்கும் ஓர் ஓய்வுநாள் தந்தால், நகருக்குச் சென்று வருகிறேன். அத்துடன் கடிதங்களையும் நானே போட்டு வருகிறேன். என்று நான் சொன்னேன். திருமதி ஃவேர்ஃவக்ஸ் முக மலர்ச்சியுடன் “அப்படியே போய்வா, அவசரம் எதுவுமில்லை, போதிய நேரம் எடுத்துக் கொண்டு உலவி வா,” என்றாள்.

நகரில் அஞ்சல் நிலையமும் நகரும் இரண்டு கல் தொலைவில் இருந்தது. புலர் காலையாதலால், வழி ஆளற்று அமைதியாயிருந்தது. ஞாயிறு தன் மென் கதிர்களால் முகிற்கூட்டங்களின் செந்நீலத் திரைகளினூடே மங்கிய ஒளியைப் பரப்பி வந்தான். மேட்டு நிலத்தின் முகட்டை அணுகியதும், சற்றுக் களைத்து ஒரு மரத்தடியில் இளைப்பாற அமர்ந்தேன்.

அச்சமயம் என் ஓய்வையும் அமைதியையும் கிழித்துக் கொண்டு தடதடவென்று ஓர்ஓசை எழுந்தது. அஃது எனக்கு