206
அப்பாத்துரையம் – 7
சென்றபோது இவ்வெண்ணம் உச்சநிலையடைந்தது. “இந்த வீட்டில் எங்காவது பேயாட்டம் உண்டா?” என்று கேட்கத் தோன்றிற்று. இது கேட்டதே, ஏதோ கண்டவள் போல் திருமதி ஃவேர்ஃவக்ஸ் சரேலென்று என்னை இட்டுக் கொண்டு கீழே இறங்கினாள்.
என் பின்னாலிருந்து அப்போது பேய் சிரித்தது போன்ற ஒரு சிரிப்புக் கேட்டது. “அஃது என்ன?” என்று கலவரத்துடன் கேட்டேன்.
66
"அஃது ஒரு பணிப்பெண் போடுகிற ஓசை” என்று கூறிவிட்டு, அவள் மறுபுறம் நோன்கி "கிரேஸ் : கிரேஸ்" என்றாள்.
கிரேஸ்பூல் என்ற வேலைக்காரி எங்கிருந்தோ வந்தாள். “ஏன் இவ்வளவு அலறல்? பேய் பிடித்தவள். அலறல் மாதிரி! போய் அமைதியாக வேலைபார்.' என்றாள் திருமதி ஃவேர்ஃவக்ஸ்.
பேச்சை மாற்ற விரும்புபவள் போல் திருமதி ஃவேர்ஃவக்ஸ் அடேலைப்பற்றிப் பேச்செடுத்தாள். இஃது உண்மையிலேயே எனக்கு விருப்பமான பேச்சாயிருந்ததனால் நான் விரைவில் அந்தச் சிரிப்பைப் பற்றிய எண்ணத்தை மறந்தேன்.