ஜேன் அயர்
(205
தங்குவதில்லை. அவர் தங்கினாலல்லாமல் இதை இன்னும் நீண்டநாள் வைத்துக் காக்க முடியாது.
""
“திரு. ராச்செஸ்டர் யார் அம்மணி?"
66
“திரு. ராச்செஸ்டர் யாரா? இன்னும் இது தெரிந்து கொள்ளவில்லையா? அவர் தாம் இந்த வீட்டுக்குரியவர். அவர் மேற்பார்வையிலிருக்கும் பெண் தான் உன் மாணவியாகப் போகிற அடேல் வாரன்ஸ்.
""
இதற்குள் அடேல் வாரன்ஸ்ஸே வந்து சேந்தாள். அவள் சின்னஞ்சிறு பெண். நன்கு சிரித்து விளையாடி யாரையும் எளிதில் வசப்படுத்த வல்லவன். மிக விரைவில் அவள் என்னுடன் பழகிவிட்டாள். முதல் நாள் பாடம் பாடமாகத் தோற்றவில்லை. இருவருக்கும் ஒரு பொழுதுபோக்காக இருந்தது.
பாட முடிவில் திருமதி ஃவேர்ஃவக்ஸ் என்னை அழைத்துக் கொண்டு வீட்டைச் சுற்றிக் காட்டினாள். வழியில் அவள் ராச்செஸ்டரைப் பற்றிக் கூறினாள். விரிவாகக் கூறிக் கொண்டே சென்றாள்.
"அவர் அடிக்கடி வருவதில்லை. ஆனால், முன்னறி விப்பில்லாமல் எந்தச் சமயமும் திடுமென வந்துவிடக் கூடுமாதலால், வீட்டை எப்போதும் கட்டுச் செட்டாகவே வைத்துக் கொள்கிறேன்” என்று அவள் அளந்தாள்.
"அவர் எப்படிப்பட்டவர்? ஏன் இங்கே தங்குவதில்லை?” என்று கேட்டேன்.
66
"கெட்டவர் என்று கூறமுடியது. ஆனால் திறமை யுடையவர். மிகவும் விசித்திரமானவருங்கூட. உலகில் மிகவும் பயணம் செய்திருப்பதனால் எந்த இடமும் அவருக்கு எளிதில் பிடிக்கவில்லை என்று எண்ணுகிறேன்."
வீட்டின் பல பகுதிகளையும் நாங்கள் பார்த்தோம். நான் எதிர்ப்பார்த்ததைவிட அது பெரிய இடமகன்ற மாளிகையாகத் தானிருந்தது. பல பகுதிகள் நேர்த்தியாகவுமிருந்தன. ஆயினும், மொத்தத்தில் அந்த மாளிகையைச் சுற்றிப் பழங்கால நினைவு கள் பின்னலிட்டுக் கொண்டிருந்தன என்ற எண்ணமே மேலிட்டது. பழைய சாதனங்களடங்கிய ஓர் அறையருகில்