உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




204

அப்பாத்துரையம்-7

"எனக்குக் குடும்பமே கிடையாது. ஆனால், என்னைத் தவிரக் குடும்பத்தை மேற்பார்க்கவும் ஆளில்லை. உங்களை வரவேற்கும் பொறுப்பை அதனால் நானே ஏற்றுக் கொள்ள வேண்டி வந்தது."

திருமதி ஃவேர்ஃவக்ஸே குடும்பத் தலைவி என்று நான் நினைத்திருந்தது தவறு என்று கண்டேன். ஆனால், குடும்பத் தலைவிபோலவே அவள் நடந்து கொண்டது கண்டு மகிழ்ந்தேன். இத்தகைய இடத்தில் என் பணி நன்கு தொடங் கிற்று என்பதை நான் அன்றே கண்டு கொண்டேன்.

மறுநாள் காலை, கதிரவன் பொன் கதிர்கள் என் அறையில் புகுந்து என்னை எழுப்பியபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கேட்ஸ்ஹெட்டில் எனக்கென அறை இருந்ததில்லை. லோவுட்டில் ஆசிரியையானபின் தனி அறை இருந்தாலும், அது இந்த அறைக்கு ஈடன்று. நிலத்தளமெங்கும் கம்பளம் விரித்திரிந்ததினால் குளிர் தட்டாமல் எங்கும் வெது வெதுப்பாயிருந்தது. பலகணிகளுக்கு நீலத்திரை இடப் பட்டிருந்தன. கதிரவன் பொன்னொளியில் இது செந்நீலமாகத் து திகழ்ந்து என் கண்களுக்கு விருந்தூட்டின. ஒரு புதிய வாழ்வில் புகுகின்றேன் என்ற எண்ணம் என்னையறியாமல் என்மீது ஊர்ந்தது.

நான் என்றுமே என் உடையணிகளைத் திருத்துவதில் கவனமில்லாதிருந்ததில்லை. இப்போது புதிய இடத்தில் புதிய என்தோற்றம் எப்படியிருக்குமோ என்ற கவலையுடன் காலை உடையிலும் ஒப்பனையிலும் கருத்தைச் செலுத்தினேன்.

ஆட்கள்முன்

உணவுமேடை கூட நான் இதுவரை கண்டவற்றைவிட உயர்வுடையதாகவே இருந்தது.

"தார்ன்ஃவீல்டு உனக்கு எப்படியிருக்கிறது? பிடித்தம் தானோ? என்று கேட்டாள் திருமதி ஃவேர்ஃவக்ஸ்.

“ஆம்; முதல் நாளிலேயே பிடித்துவிட்டது.”

66

"அப்படியா! மிக மகிழ்ச்சி. ஆனால், இதை எவ்வளவு ஒழுங்குபடுத்தினாலும் திரு. ராச்செஸ்டர் இங்கே மிகுதி