உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஜேன் அயர்

(203

இருபுறமும் உள்ள நிலம் கட்டாந்தரையாகவே இருந்தது என்பது புலப்பட்டது. நான் செல்லும் இல்லம் ஊரிலிருந்து தொலைவிலுள்ள ஓர் ஒதுக்கிடம் என்பது சொல்லாமலே தெளிவாயிற்று. ஆனால், இதுவும் என் துவும் என் மனநிலைக்கும், விருப்பத்துக்கும் உகந்ததாகவே இருந்தது.

வண்டியோட்டி ஒருபெரிய பழங்கால மாளிகை முன் இறங்கி வாயிற்கதவுகளைத் திறந்தான். உட்கதவை வந்து திறந்த பணிப்பெண் வழிகாட்டி "இவ்வழி வருக அம்மணி” என்று கூறி முன் சென்றாள்.

நடுவிலிருந்த நீண்ட சதுரமான கூடத்தைத் தாண்டி ஒரு சிறிய அறைக்குள் பணிப்பெண் என்னை இட்டுச் சென்றாள். அங்கிருந்த முதுமை வாய்ந்த மாதுதான் என் கடிதத்துக்கு மறுமொழி வரைந்தவர் என்று உணர்ந்து கொண்டேன். அவள் நான் வந்ததும் எழுந்திருந்து "வா அம்மா! பயணம் எப்படி இருந்தது? உடல் நலந்தானே!” என்று அன்புக் கனிவுடன் கேட்டார்.

“நீங்கள் தாம் திருமதி ஃவேர்ஃவக்ஸ் என்று நம்புகிறேன்" என்றேன்.

"ஆம்; இப்படி உட்கார். நீண்ட பயணத்துக்குப் பின் அலுப்புடன் இருப்பாய். உணவு கொண்டு வரச் சொல்லுகிறேன். உண்டு ஓய்வு எடுத்துக் கொள். பின் நாளை பேசிக் கொள்ளலாம்,” என்றாள்.

"வீட்டாசிரியை நிலை ஓர் உயர் பணியாள் நிலையை விட மேலன்று என்பதை நான் அறிவேன். எனவே, இவ்வளவு மதிப் புடனும், அன்பாதரவுடனும் நான் வரவேற்கப்படுவது கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தேன். ஆயினும், என் வேலையில் நான் கொண்ட அக்கறையைக் காட்ட வேண்டும் என்பதை நான் எண்ணினேன். என் மாணவி செல்வி ஃவேர்ஃவக்ஸை நான் இப்போதே காணமுடியுமானால் மகிழ்ச்சியடைவேன்,' என்றேன்.

"செல்வி ஃவேர்ஃவக்ஸா? ஓகோ! உங்கள் மாணவி பெயர்

செல்வி வாரன்ஸ் என்பது உங்களுக்குத் தெரியாதே!”

66

அப்படியா! அது உங்கள் புதல்வி என்று நான்

நினைத்தேன்.”