உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




222

விட

அப்பாத்துரையம் - 7

என் உள்ளம் திரு. ராச்செஸ்டரிடம் மதிப்பு, நட்பு ஆகிய இரு எல்லைகளையும் தாண்டிவிட்டது. அதை நான் கட்டுப்படுத்தியே வந்தேன். ஆனால், அவர் உள்ளத்தின் நிலையை என் உள்ளத்துடன் இணைத்துப் பார்க்கவும் நான் இதுவரை கனவு காணவில்லை. ஒரு வீட்டாசிரியையிடம் காட்டும் மதிப்பை எனக்கு உயர் மதிப்புத் தந்தார் என்று மட்டுமே எண்ணியிருந்தேன். இப்போது அவர் ப்போது அவர் உள்ளமும் அம் மதிப்பெல்லை தாண்டி நட்பெல்லையில் நடமாடுகிறது என்று கண்டேன். இது எனக்கு என் அகத் துன்பத்திடையே பெருத்த ஆறுதல் தந்தது என்பதை என்னால் மறுக்க முடியாது. ஆனாலும் நட்புக் கூட என் உள்ளத்தின் போக்குக்கு மிகவும் இடையூறானது என்று நான் கருதினேன். அவர் நட்பு வலையிலிருந்து கூடியமட்டும் தொலைவில் விலகியிருக்கத் திட்டமிட்டேன்.

"நீ ஏன் முகவாட்டத்துடனிருக்கிறாய்? விருந்தினர் இருக்கும்வரை நான் அவர்களுடனேயே இருக்க வேண்டி யிருக்கிறது. ஆனாலும், எங்களுடன் நீ வந்து கலந்து கொண்டால் நான் உன்னை அவ்வப்போது காண வழியிருக்கும். நீ தங்குதடையில்லாமல் வரவேண்டுமென்று தான் நான் விரும்புகிறேன். உன்னை எதிர்பார்ப்பேன். ஏமாற்றிவிடாதே வருகிறேன்." என்று கூறி அவர் ஏதோ அவசர வேலையை எண்ணிப் போய்விட்டார்.

நட்பு வலையிலிருந்து விலக நான் இட்ட திட்டம் இங்ஙனம் விரைவில் சாய்ந்தது. அவர் நட்புத் தாண்டி என்னிடம் பற்றுக் கொண்டு விட்டார் என்பது இப்போது தெரியவந்தது. செல்வி பிளான்சியை உள்ளடக்கி விருந்தினர் அனைவருடனும் அவர் வேண்டா வெறுப்பாகத்தான் கலந்து கொள்வதாகக் கூறிவிட்டார். ஆகவே, செல்வி பிளான்சியிடம் அவருக்குப் பாசம் இல்லை. ஆயினும் விருந்தினருக்காக இவ்வளவு பரிபவர், அவள் உயர் நிலையையும் பணத்தையும் எண்ணி அவளை மணக்க உடன்பட்டிருக்கலாம் என்று எனக்குத் தோன்றிற்று.

என் ஐயங்களையெல்லாம் அகற்றி என்னை அவருடன் பிணைக்கத்தக்க வகையில் மற்றொரு நிகழ்ச்சி ஏற்பட்டது.