ஜேன் அயர்
(227
திரு.மேஸன் போய்ச் சில நாட்களுக்குள் எப்படியோ ராச்செஸ்டர் உள்ளத்தில் நானும், என் உள்ளத்தில் ராச்செஸ்டரும் நீக்கமற நிறைந்து இடம் பெற்று விட்டோம்.
"இந்த இருளடர்ந்த வீட்டில் அடைபட்டுக் கிடப்பானேன்? சிறிதுநேரம் தோட்டத்தில் சென்று இருந்து வரலாம் வா” என்று அவர் ஒருநாள் அழைத்தார்.
இதை ஏன் இருளடைந்த வீடு என்கிறீர்கள்? இஃது அழகான இடமகன்ற மாளிகையாயிற்றே, என்றேன்.
அவர், “நீ இதன் வெளிப்புறத்தையே காண்கிறாய். அது என் வாழ்வை எவ்வளவு கருக்கிற்று என்பதை நீ அறியமாட்டாய். உண்மையில் அன்று என் படுக்கையில் எழுந்த தீ இந்த வீட்டைச் சாம்பலாக்கியிருக்கக் கூடுமானால்கூட, நான் வருத்தப்பட்டி ருக்கமாட்டேன்” என்றார்.
இருவரும் தோட்டத்தின் பக்கமாகப் பேசிக் கொண்டே சென்றோம்.
அவர் கிரேஸ்பூலின் தொல்லைகளை எண்ணியே வீட்டை வெறுக்கிறார் என்று எனக்குத் தோன்றிற்று. "கிரேஸ்பூலை இன்னும் வீட்டில் ஏன் வைத்துக் கொள்ள வேண்டும். அனுப்பிவிட்டுத் தொல்லையில்லாமல் இருப்பது தானே?” என்றேன்.
"கிரேஸ்பூலை அனுப்புவதனால் வெளித்தொல்லை தான் தீரும். தொல்லை இங்கே என் நெஞ்சில் இருக்கிறது.” என்றார் அவர்.
க
அவருக்குச் செல்வி இங்கிரம் மீது காதல் இல்லை என்பதை நான் சில நாளாக அறிந்து கொண்டிருந்தேன். தம் குடும்ப மதிப்பை உயர்த்திக் கொள்ளவே அவளை மணம் செய்து கொள்வதாக அவர் எண்ணியிருக்க வேண்டும். எனவே 'நெஞ்சில் தொல்லை' என்ற சொல்லுக்கு என்ன பொருள் கொள்வதென்று எனக்குத் தெரியவில்லை. என் மனம் இதற்குள் அவரிடம் முழுதும் ஈடுபட்டுவிட்டதானாலும், அவர் எந்த அளவு என்னை நாடினார் என்பதனை நான் அறிய முடிய வில்லை. எப்படியும் செல்வி இங்கிராமின் திருமணத்தைத்