உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




9. திருமதி ரீடின் முடிவு

கேட்ஸ்ஹெட்டிலிருந்து இப்போது எனக்குக் கடிதம் வந்தது. அத்தை திருமதி ரீட் அதை எழுதியிருந்தாள். "என் உடல்நிலை முற்றிலும் தளர்ந்து விட்டது. நீண்ட நாளாய் நான் பாயும் படுக்கையுமாக இருந்து இப்போது சாவின் வாயிலை அணுகிவிட்டேன். இறக்குமுன் உன்னிடம் தனித்துச் சில முக்கியமான செய்திகள் கூற விரும்புகிறேன். ஆகவே ஒரு தடவை வந்து போகும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று அவள் எழுதியிருந்தாள்.

நான் ஒருவாரம் போய் வரலாமென்று திரு. ராச்செஸ்டர் இணக்கம் அளித்தார். அத்துடன் நான் துணையாக யாரைக் கூட்டிக்செல்ல விரும்புகிறேன் என்றும் கேட்டார்.

“என் அத்தை தன் பணியாளை அனுப்பியிருக்கிறார்கள்,” என்றேன்.

'சரி, செலவுக்குப் பணம் வேண்டுமே. நீ எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய்?"

66

'ஐந்து பென்னிகள்," என்று எடுத்துக் காட்டினேன். அவர் ஒரு நாணயச்சீட்டை (நோட்டை) என்னிடம் நீட்டினார். அஃது ஐம்பதுபொன் சீட்டு. அவர் என் கணக்கில் தர வேண்டியது பதினைந்து பொன் தான்.

66

என்னிடம் சில்லறை இல்லையே!" என்றேன் நான்.

"அப்படியா, அதுவும் சரிதான். உன்னிடம் முழுத் தொகையும் கொடுப்பதும் தப்புத்தான். ஐம்பது பொன்னைச் செலவு செய்து கொண்டு நீ மூன்று மாதம் இருந்தாலும், இருந்துவிடுவாய்! ஆகவே பத்து எடுத்துச் செல்.'