236
அப்பாத்துரையம் 7
"ஆயினும் பிரியச் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது.”
"திருமணத்தையும் பிரிந்து செல்லுவதையும் மறந்து சில நாளாகிவிட்டது.அதைக் கேட்பது காதுக்கு நாராசமாயிருக்கிறது. இவ்வளவு கரிசனமாக இதுவரை பேச்சுக் கொடுத்துப் பீடிகை போட்டது இதற்குத்தானா!” என்று எனக்கு எரிச்சலாயிருந்தது.
“சமயம் வந்ததும் எந்தநேரத்திலும் போகச் சித்தமாயிருக் கிறேன் நான்.”
“சமயம் வருகிறதென்ன? இன்றே வந்துவிட்டது.”
எனக்குப் பின்னும் தூக்கி வாரிப்போட்டது. "அப்படி யானால் திருமணம் உறுதியாகிவிட்டதா?” என்றேன்.
66
"ஆம், எனக்குத் திருமணமானவுடன் நீ போய் விட வேண்டுமென்று நீ தானே சொன்னாய். ஆனால் எங்கே போவது என்று உறுதி செய்யும் பொறுப்பை என்னிடம் விட்டிருக்கிறாய்?”
"ஆம்; ஆனால் பெண் யார்? திருமணம் எப்போது?"
66
திருமணம் விரைவில் வந்துவிடும். பெண் யாராயி ருந்தாலென்ன? செல்வி பிளான்சி இங்கிரமைப் போன்ற ஒருத்தி என்று வைத்துக் கொள்ளேன்!”
"எனக்கு எங்கே இடம் பார்த்திருக்கிறீர்கள்?”
"மேற்கு அயர்லாந்தில்,”
“அவ்வளவு தொலைவா?” "ஆம்."
66
"தார்ன் ஃவீல்டு இல்லத்தை விட்டுப் போனாலும் அருகிலேயே இடம் பார்த்து இருக்கலாம் என்று நினைத்தேன்.”
ஏன் அயர்லாந்துக் கடல் கடந்தவுடன் இந்த எண்ண மெல்லாம் போய்விடும். தார்ஃவீல்டையும் மறந்து விடுவாய், என்னையும் மறந்துவிடுவாய்."
அவர் என்னைப் பேச்சுப் பொறியில் சிக்கவைத்து விட்டார். நான் என்னையும் என் நிலையையும் மறந்தேன். "என் உள்ளத்தை நீங்கள் அறியப் போவதில்லை. நான் தங்களை ஒருநாளும்