உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




250

அப்பாத்துரையம் 7

பெயரால் நான் நடைப்பிணமாக வாழ வேண்டுமா? நீயே சொல்! இந்தச் சட்டப் பொறியிலிருந்து நீ என்னை விலக்கலாம். நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன் என்பது உனக்குத் தெரியும். நீ என்னை எவ்வளவு மனமாரக் காதலிக்கிறாய் என்பதை நான் அறிவேன். திருமதி ராச்செஸ்டரைப் பார்க்க, கிரேஸ்பூல் இருக்கிறாள். அவள் தந்தையின் பெருஞ்செல்வம் இருக்கிறது. அடேல் கல்வியைக் கவனிக்கப் பணம் இருக்கிறது. பள்ளிக் கூடம் இருக்கிறது. எனக்கு நீயும் தன்னாண்மையுடன் கூடிய வறுமையும் போதும். உன்னுடன் இருந்து நான் தோட்ட வேலை செய்தால்கூட மனநிறைவாகவே இருக்கும். இனி உன் முடிவைப் பொறுத்தது என் வாழ்வு. அதை அறியக்காத் திருக்கிறேன்,” என்றார்.

மழை ஓய்ந்தது. அமைதி நிலவிற்று. அவர் என் மறு மொழியை எதிர்பார்த்து நின்றார். ஆனால், என்னிடம் தயக்கம் இல்லை. நானும் ஒரே துணிவுடன் பேசினேன்.

-

“நீங்கள் கூறுவதெல்லாம், உங்கள் அளவில் சரி. நீங்கள் பணத்தை உங்கள் தந்தைமாதிரி வழிபடாமலிருக்கலாம். ஆனால், பணக்கார நேர்மைதான் இன்னும் உங்களிடம் இருக்கிறது நீங்கள் உங்கள் நலத்தைத்தான் நினைத்துப் பார்க்கிறீர்கள் - நானும் ஒரு மனித நெஞ்சம் படைத்தவள். எனக்கும் ஒரு தன்மதிப்பு உண்டு என்பதை மறந்தீர்கள். உங்களுக்கு வாழவழியில்லை. அது சரி, உங்களுக்குத் துன்பம் உண்டு. நான் வருந்துகிறேன். உங்களுக்கு அநீதி செய்யப் பட்டிருக்கிறது. நான் கண்டிக்கிறேன். இருக்கப்படுகிறேன். ஆனாலும் அதற்காக நான் உயிரை இழக்க ஒருப்படமாட்டேன். தன்மதிப்பை விட்டுவிட இணங்க மாட்டேன். மேலும் என் தன் மதிப்பு மட்டுமன்று. திருமதி ராச்செஸ்டரின் தன்மதிப்பு. என் தாய். உங்கள் தாய் எல்லாப் பெண்களின் பெண்மையின் தன்மதிப்பு. நான் உங்கள் மனைவியல்லள். நான் உங்களை மனமார நேசித்தாலும், உங்களுடன் நான் ஒருநாள் கூட இருக்க விரும்பவில்லை,” என்றேன்.

அவர் முகம் கவிழ்ந்தது. பேசாது எழுந்து சென்றார். சிறிது தொலை சென்றதும் திரும்பி நின்று, 'ஜேன், உனக்கு என்மீது உண்மைக்காதல் இல்லை,” என்றார்.