உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஜேன் அயர்

(249

"திரு.மேஸன் என் தந்தையின் நண்பர். அவரிடம் தந்தை யின் செல்வத்தின் மூவிரட்டி செல்வம் இருந்தது. ஆனால், எக்காரணத்தாலோ நீண்ட நாள் மணமாகாதிருந்த ஒரு புதல்வி அவருக்கு இருந்தாள். அவளை மணப்பவருக்குத் தம் செல்வத்தின் மூன்றில் இரண்டு பகுதியைக் கொடுக்க இருப்பதாக அவர் ஒரு நாள் என் தந்தையிடம் கூறினார். தந்தையின் பேரவா கிளைத்தெழுந்தது. மூன்றில் இருபங்கைத் தான் வாங்கிக் கொண்டு செல்வி பெர்தாமேஸனை என் மனைவி யாக்கத் துணிந்தார். திருமணம் செய்யுமுன் நான் பெர்தாவைத் தனியாகப் பார்க்கவில்லை. தனியாகப் பார்க்காததால், அவள் அழகில் மயங்கி நானும் ஒத்துக் கொண்டேன்.

"மணமானபின் தெரிந்தது, பெர்தா மணவாழ்வுக்குரிய பெண்ணல்லள் என்று! கொடிய பைத்தியம் அவளை ஒரு நாளைக்கொருதரம் பேயாக்கியிருந்தது. மற்ற நேரங்களிலும் எந்த ஆணைக் கண்டாலும் - தன் அண்ணனைக் கண்டால் கூட - அவளுக்குப் பித்த வெறி எழுந்துவிடும்.

"என் வாழ்வு பாழாயிற்று. எனக்கு அறிவு வந்ததே நான் எப்படி உடலோடு உயிர்க்கொலை செய்யப்பட்டுவிட்டேன் என்பது தெரியவந்தது.

66

என் நகர வாழ்வைப் பிறர் அறியாமற் காக்கவே நான் என் தந்தை இறந்ததும் இந்த வெறிகொண்ட மனைவியுடன் இங்கே வந்தேன். கிரேஸ்பூல் மேஸன் வீட்டிலேயே பணி யாளாயிருந்து பெர்தாவைப் பார்த்து வந்தாள். அவளையே உடன் கொண்டு வந்து பெர்தாவைப் பேணவைத்தேன். ஆனால், அவள் என் மனைவி என்பதையே யாரிடமும் சொல்லாமல் அவளை வீட்டினுள் வைத்துக் காக்கும்படி நான் கிரேஸ்பூலிடம் வேண்டினேன். அவள் இணங்கினாள்.

“உன்னைக் காணும் வரை நான் வாழ்க்கையில் வெறுப்புற்று எல்லாரிடமும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதன் மர்மம் இதுவே. நீ வந்தபின் இந்நிலையை மாற்றினாய். என் மனைவி என்னறையில் தீ வைத்ததையும் தன் அண்ணன் திரு. மேஸனையே குத்திக் கொல்லப் பார்த்ததையும் நீ அறிவாய். வாழ்நாள் முழுவதும் மனைவியாக வாழமுடியாத இந்தப் பைத்தியத்தின்