உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




248

அப்பாத்துரையம்-7

தடுக்கி நான் விழ இருந்தேன். தடுத்தது ராச்செஸ்டர் கை அவர் என்னைத்தாங்கி அறைக்கே இழுத்து வந்தார். என் காலைப் பிடித்துக் கொண்டு என்னிடம் மன்றாடினார். எனக்கு முதல் தடவை யாகச் சீற்றம் ஏற்பட்டது.

“உங்கள் செயலால் என் பழைய வாழ்வும் கெட்டது. புது வாழ்வுக்கும் வழி இல்லை. இன்னும் என்ன செய்ய மேண்டு மென்கிறீர்கள்?” என்று நான் இரைந்தேன்.

“அதனால்தான் உன்னை ஆதரவற்றவளாக அலையவிட மனமில்லை. சட்டந்தவிர மற்ற எந்த வகையிலும் நான் உன்னை மனைவியாக நடத்துவதில் என்ன தவறு? நீதான் என் இரண்டுபட்ட நிலையைப் பார்த்தாயே! நீ போனால் நான் உயிர்வாழ முடியாது; என்மீது இரக்கங்கொள்,' என்றார். நான் சிறிதும் இணங்கவில்லை, “சீ! இந்த எண்ணம் உங்களுக்குத் தகாது. நான் இறந்தாலும் இறப்பேனே தவிர. என் தன் மதிப்பை இழக்க மாட்டேன்,” என்றேன்.

""

"குறைந்த அளவி எனக்காக இன்று போவதை நாளைக் காவது ஒத்திப்போடு. நான் செய்த தீங்கு பெரிது. அதை என்னால் இனிச் சரிசெய்ய முடியாது. ஆனால், என் வாழ்வின் போக்கை நான் உனக்கு முழுதும் கூறியாக வேண்டும். அதை நீ கேட்டபின் உன் மனம் எப்படியோ அப்படியே நடக்க விட்டுவிடுகிறேன். இந்த ஒரே ஒரு கருணை காட்டும்படி கோருகிறேன்,” என்றார்

அவர்மீது எனக்கு உள்ளூர இரக்கம் இல்லாமல் இல்லை. நான் இந்த அளவு என் திட்டத்தைத் தளர்த்த ஒத்துக் கொண்டேன்.

அவர் தொடங்கினார்:

“என் தந்தையிடம் பெருஞ்செல்வம் இருந்தது. ஆனால், அவர் பேராவல் அவரை அமைதியாக வாழ விடவில்லை. எனக்கும் எம் தமையனுக்கும் செல்வத்தைப் பங்கிட்டால் அது குறைந்துவிடும் என்று எண்ணி, அவர் அது முழுவதையும் என் தமையனுக்கே கொடுத்துவிட்டார். அத்துடன் முழுவயதும் அனுபவமும் பெறாதநிலையிலே என்னையும் விற்றுப் பணமாக்கிவிட எண்ணினார்.