உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(254)

அப்பாத்துரையம் 7

நான் என் உண்மைப் பெயரையோ வாழ்க்கை

வரலாற்றையோ இத்தகையவர்களிடம் கூடத் தெரிவிக்க அஞ்சினேன். ஆகவே, என் பெயர் கேட்டபோது ஜேன் எலியட் என்று கூறினேன். இறுதி நிகழ்ச்சி தவிர மற்ற நிகழ்ச்சி களையும் ஊர் பேர் மறைத்துத் தெரிவித்தேன். ஆனால், அவர்கள் கேள்வியில் பிறர் செய்திகளைத் துருவியுணரும் சிறுமை யவா இல்லை. பெருந்தகைமை வாய்ந்த அன்புக் கனிவார்வம் மட்டுமே இருந்தது.

உடலில் சிறிது தெம்பு ஏற்பட்டதும், நான் ஏதேனும் வேலை செய்து அவர்களிடமிருந்து உழைக்க விரும்புவதாகக் கூறினேன். அவர்களும் சிறிது தடையுரைத்து, பின் என் தன்மதிப்பை மதித்தனர் நான் என் கல்வியைப் பயன்படுத்தி அண்டை அயலிலுள்ள சிறுவர் சிறுமியர்களுக்குக் கல்வி புகட்டியும், பள்ளிகளில் வேலையேற்றும் அந்நல்ல குடும்பத் தினர் வருவாயில் என் பங்கைச் சேர்த்து, அவர்களுடன் அளவளாவி வாழ்ந்தேன். தூயதிரு. ஜான் எனக்கு அண்ணனா யிருந்தால் கூட என்னை அவ்வளவு பேணியிருக்க மாட்டார். டயானாவும் மேரியும் என் உடன்பிறந்த தங்கையராயிருந்தால் கூட அவ்வளவு நேசபாசம் காட்டியிருக்க முடியாது. அந்த அளவு நாங்கள் நால்வரும் ஒரு குடும்பமானோம்.

உள்ளூரப் பட்டுப்போன என் வாழ்வு வெளித்தோற்றத்துக் கேனும் தளிர்விட்டது. உலகுக்கு ஜேன் எலியட், ஜேன் அயரின் ஒரு நிழல் அல்லது ஓர் ஆவியானாள். ஜேன் அயருக்கு கிடைத்த அன்புச் சூழலை விட ஜேன் எலியட்டுக்குக் கிடைத்த அன்புச் சூழல் தெய்விகச் சூழலாகவே இருந்தது. ஆனால், அன்பு வேறு, வாழ்க்கைப் பற்று வேறு. வாழ்க்கைப் பற்றற்ற நான் தாமரையிலையில் தண்ணீர்த் துளிபோலப் பிறருக்குக் கவர்ச்சிகரமாக ஒளி வீசினேன்.

என் வாழ்வில் மீண்டும் எதிர்பாராத திருப்பங்கள் ரண்டு நேர்ந்தன. ஒன்று என் ஆவிவாழ்வின் கட்டைப் பெருக்கி எனக்குப் பெருஞ் செல்வத்தைக் கொடுத்தது. இரண்டாவது எனக்குச் சொல்லொணாத் துன்பந் தந்தது. ஆனால், அதுவே எனக்கு முடிவில் வாழ்வும் அளித்தது.