உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

சிலப்பதிகாரமும் மலையாள நாடகமும்

81

மலையாள நாட்டில் சமற்கிருத நாடகம் வடஇந்தியா விலுள்ள சமற்கிருத நாடகங்களைவிட நீடித்த பழைமை யுடையது. அதனைவிட நீடித்தும் வளம் பெற்றும் இருந்தது. பாசன் காலத்திலிருந்து இன்றுவரை அஃது இடையறாது நிலவி வந்துள்ளது.

உண்மையில் மலையாள நாட்டு நாடகம் வடஇந்திய சமற்கிருத நாடகங்களைவிடப் பழைமையானது மட்டுமல்ல; அது சமற்கிருத மொழியைவிடப் பழைமை வாய்ந்தது.சிலப்பதிகாரக் காலத்துக்கு முன்னிருந்தே அது நீடித்த வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது. உலக நாடகக் கலை வளர்ச்சியின் வரலாற்றிலே, மலையாள நாட்டுக்கு ஒப்பாக மூவாயிரம் ஆண்டுக்குமேல் நீடித்த வளர்ச்சியுடைய நாடக மரபை, நாம் வேறு எந்த மொழியிலோ நாட்டிலோ காண முடியாது.

மலையாள நாட்டு நாடக மரபின் பழைமையைச் சிலப்பதிகாரத்தின் (வஞ்சிக் காண்டம் 28ஆவது நடுகற் காதை 75- 77) அடிகள் குறித்துக் காட்டுகின்றன.

"இமையவன் ஆடிய கொட்டிச் சேதம்

பாத்தரும் நால்வகை மறையோர் பறையூர்க் கூத்தச் சாக்கையன் ஆடலில் மகிழ்ந்து”

என வரும் அடிகளால் சேரன் செங்குட்டுவன் வடநாட்டு யாத்திரை முடிந்து வந்தபின் பலவகைக் களியாட்டுகளைப் பார்த்தபோது, அவற்றிடையே சாக்கைக் கூத்தையும் கண்டு மகிழ்ந்தான் என்று அறிகிறோம். இக்கூத்தை அரசன் முன் ஆடியவன், "பறையூர்க் கூத்தச் சாக்கையன்” என்று

குறிப்பிடப்படுகிறான். டாக்டர் சாமிநாத ஐயர், தம் சிலப்பதிகாரப்பதிப்பில் இவ்வடிகளின் கீழ், “சாக்கையர் என்னும் ஒருவகைச் சாதியார் இப்பொழுதும் கூத்து நிகழ்த்தும் தொழிலுடையவராக மலையாள நாட்டிலுள்ளனர் என்று தெரிகிறது" என்று குறிப்பிடுகிறார். பறையூர் என்பது வட திருவிதாங்கூரில் இன்றும் உள்ளது. அது திருவிதாங்கூரில் மிளகு பெருக்கமாக விளையும் பகுதியாகிய குட்ட நாட்டிலிருப்பதால் குட்டம்பறவூர் என்று இன்று வழங்குகிறது. இவ்வூரில் இன்னும்