உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

107

பேராசிரியர் அத்தகைய எதிர்ப்பைக் கிளற ஒரு சிறு சூழ்ச்சியைக் கையாண்டுள்ளார். தமிழகத்தின் கலைஞரிடையே முன்னணி வரிசையில் இடம் பெற்றுள்ள கவிஞர் கண்ணதாசன் மீது பின்னிருந்து கல்லெறிவதன் மூலம் கலைஞர் உலகின் கவனத்தை அவர் தம் திசையிலும் தமிழ்த் துறையாளரால் கவனிக்கப் படாதிருந்த பெரியார்கள் பக்கமும் திருப்பும் வாய்ப்பு அவர்க்குக் கிட்டியுள்ளது.

சிலப்பதிகாரம் பற்றிப் பொதுமக்களிடையே - சிறப்பாகத் தமிழ்ப் பணியுடன், தமிழினப் பணியும், தமிழ்ப் பண்பாடு வளர்க்கும் பணியும் மேற் கொண்ட மறுமலர்ச்சி இயக்கத் தோழர்களிடையே - புதிய எண்ண அலைகளைப் பரப்ப இச் சந்தர்ப்பம் பயன்பட்டுள்ளதாதலால் அவர் தூண்டிய மறுப்பே சிலம்பு தூண்டும் தமிழகச் சிறப்பை வளர்க்கவும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது எனலாம்.

புறக்கணிப்புக் குழுவைப் பேராசிரியர் ஆதரித்த காலத்திலும், அவர் ஆதரவை அது பெற்றதேயன்றி, அதன் ஆதரவை அவர் பெறவில்லை. அவர் ஆராய்ச்சி பல்கலைக்கழக மேடை ஏறவில்லை. இதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. அவர் ஆராய்ச்சிகள் இராவ்சாகிப் வையாபுரிப் பிள்ளை அவர்கள் கருத்துகளின் நிழல்களாயிருந்தனவேயன்றி, தனித் தன்மை யுடையவையாகவோ, இராவ்சாகிப் அவர்களின் கருத்துகளுக்கு வலிமை தருபவையாகவோ அமையவில்லை. முன்னுரை தர இசைந்த இராவ்சாகிப் அவர்களே பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை ஆட்சியிலிருந்தாலும் பல்கலைக்கழக முத்திரையைத் தம் நிழலுக்குத் தர அவர் துணியவில்லை.

ரண்டாவதாகப், பேராசிரியர் ஆராய்ச்சியாளர் என்ற முறையில் ஆயிரம் பொற்கொல்லரைப் பலியிட்ட செய்தியை ஆராய்ச்சி நோக்கமாக முன் வைக்கவில்லையென்றாலும், சரியாகவோ, தப்பாகவோ மனிதரென்ற முறையில் அதுவே அவரை இயக்கிற்று என்று பலரும் எண்ணினர் என்பதில் ஐயமில்லை. இஃது ஆளும் இனத்தவரான ஆரியரைப் பற்றிய செய்தியாக இருந்திருந்தால், இத்தகைய ஓர் உள்நோக்கமே அவர் நூலுக்கு மேலோர் ஆதரவையும், மேலிடத்தார் ஆதரவையும் கட்டாயம் தேடித் தந்திருக்கும். துரதிருஷ்டவசமாக அது