உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 85

இங்கே மனித இனச் சமுதாயத்தில் வளம்படைக்கும் வேள் அல்லது குடியரசனே இயற்கையில் மழைவளம் தரும் வேந்தன் அல்லது இந்திரனாகவும், அவ் வேளரசரின் வேள் குடிமக்களே வேளாளர் அதாவது அம் மழைவள அடிப்படையான உழவாண்மை வளமும் அது சார்ந்து வளர்ந்த வாழ்வு வளங்களும் படைக்கும் குடியரசமரபின் மலர்ச்சிக்குரியவர்களாக வும் (தேவர்களாகவும்) உருவகிக்கப்பட்டது காணலாம். இது கீழே விரிக்கப்படவிருக்கிறது.

மேலே காட்டியபடி, வேள் என்ற சொல்லும் அதன் பழம் பன்மை வடிவான வேளிர் என்ற சொல்லும் தம் சங்க காலக் குடியரசு மரபுப் பொருளை இழந்து, அப் பொருளில் சங்ககாலத்துக்குப் பிற்பட்ட முடியரசுக் காலங்களில் கிட்டத் தட்ட வழக்கிறந்த சொற்கள் ஆகிவிட்டன. சமக்கிருதத்தில் கூட, முதலில் பெண் என்ற பொருளும், பின்னர் மக்கள் என்ற பொருளும் கொண்ட ஜன என்ற சொல்லடியாகப் பிறந்த ஜனபத (குடியரசு) ராட்டிர (நகர் - நாடு அரசு; ராஜ் - வேள்; த்ர - காத்துப்பேணு) வேள் (ராஜ், ராஜன்ய) ஆகிய சொற்களின் நிலையும் இதுவே. ஆயினும் வேள் அல்லது வேளிர் என்ற சொல்லின் மரபுவிரிவாகத் தொல்காப்பியத்திலும் திருக் குறளிலும், சங்க இலக்கியத்திலும் அருகலாகவே வழங்கப்படும் வேள்வி, வேளாண்மை, வேளாளர் ஆகிய சொற்கள் வேள்புல அரசின் மருதத்திணை, மருதத்திணை ந்த ஐந்திணை மலர்ச்சிகளை நமக்கு நன்கு புலப்படுத்திக் காட்டுகின்றன. (இது முழு அளவில் பின்னர் விளக்கப்பட விருக்கிறது.)

தொல்காப்பிய மரபிலும் தமிழிலக்கண மரபிலும் தமிழிலக்கிய மரபிலும் குறிஞ்சிநில மக்கள் குறவர் என்றும், முல்லைநில மக்கள்ஆயர் என்றும், பாலைநில மக்கள் எயினர் என்றும்,நெய்தல்நில மக்கள் மீனவர் என்றும் அழைக்கப்பட்டது போல, மருதநில மக்கள் வேளாளர் என்று அழைக்கப்பட்டனர். எல்லாத் திணைகளிலிருந்தும் ஆளும் மரபில் பயின்ற குடிகள், அருந்திறலாளர்கள், அறிவாளர்கள் ஆகிய அனைவரும் நாட்டு வாழ்வின் நடுத்திணையாகிவிட்ட மருதத்திணையின் புதிய ஐந்திணை மையத் தலைநகர்களைச் சூழ வந்து புதுக் குடியமர்வுற்று ஐந்திணைவளமும் அதன் அப்பாலைய வளமும்