உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
90 ||

அப்பாத்துரையம் - 14



||-


எல்லையிலேயே அவ்வரசர் களுக்கு அடங்கியும் அடங்காமலும், நட்பாகவும் பகையாகவும் வேளிர் பலர் ஆண்டு வந்தனர். ஆயினும், தமிழ் மரபு அம் மூவரசுக்குப் புறம்பாகத் தொண்டை கொங்கு நாடுகளையே குடியரசுகளுக்கேயுரிய பரப்புகளாகவும், அதேசமயம் இருவேறு தனித்தன்மைகளையும் இருவேறு தனி ரு நாடுகளாகவும் கணித்து

முழுமைகளையுமுடைய

வந்திருந்தது. வரலாற்றுப் போக்கு இக்கணிப்பை மெய்ப்பிப்ப தாகவே அமைந்துள்ளது.

பண்டைப் பெருந்தொண்டை நாடும், பண்டைப் பெருங்கொங்கு நாட்டில் இன்றைய கொங்குப் பரப்பாகிய அகநாடு கடந்த புறப்பகுதிகளும் சங்ககாலத்தில் கொங்கு அகநாட்டைப் போலவே முற்றிலும் வேள்புலப் பரப்புகளாக விளங்கியிருந்தன. ஆயினும், அக்காலத்தை அடுத்து உடனடி யாகவே அவை தம் வேள்மரபுகளை முடியரசு பேரரசுகளாக்கிக் கொண்டன. தவிர, இவ்விருவகைப் பரப்புகளுமே தமிழக மூவரசு நாடுகளையும் இந்தியாவின் மற்றப் பகுதிகளையும் போன்று குடியரசர்களை மட்டுமன்றிக் குடியரசுப் பண்பு, குடியரசுமரபு ஆகியவற்றையே முற்றிலும் இழந்து மறந்து விட்டன. அத்துடன், அவை வரலாற்றில் என்றும் திரும்பக் குடியரசுப் பண்புக்கு மீளாமல், தம் தனித்தன்மைகளை அறவே கைவிட்டுப் புறஉலகின் முடியரசு பேரரசுப் போட்டிப் பரப்புகளுடன் பரப்பாகித் தம் தனிநிலை, தனிப்பண்புகளை, அழியவிட்டு விட்டன. T. அவற்றின் பண்டைய மண்டல எல்லைகளும், கொங்கு நாட்டு எல்லையைப் போல இன்றும் பண்பு, பண்பாட்டு எல்லையாய் நிலவாமல், இலக்கிய மரபு அல்லது வரலாற்று மரபுக்கு மட்டுமேயுரிய பழங்கால எல்லைத் தடங்களாய் விட்டன.

இன்றைய கொங்கு நாட்டெல்லையிலும் சங்ககால இறுதிக்கு இரண்டு நூற்றாண்டுகள் முன்னாகவே, தொடங்கி அவ்விறுதிக்குள் வேளிர் ஆட்சிகள் பெரும்பாலும் தம்மிடையே போட்டிகளுக்கு ஆளாகி, வெளியிலிருந்து ஊடுருவிய அரசு- பேரரசுகளுக்குப் படிப்படியாக இரையாயின. ஆயினும், சங்ககாலத்திலும் சரி, பிற்காலத்திலும் சரி, கொங்கு நாடு தன் பரப்புக்குரிய வேள்புலங்கள் எவற்றையும் முடியரசாக மலரவிடவில்லை. அது மட்டுமன்று. சங்ககாலத்திலும் சரி, அதன்