உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 89

குடியரசருக்கு நாட்டு மக்களின் மக்கட்படையன்றி (ஆங்கிலம்: Fyrd அல்லது Militia அல்லது National Army) நிலவர ஊதியம் பெற்று உழைக்கும் நிலைப்படையோ (Standing Army), தம் அணுக்க உற்றார் உறவினரான நாட்டு மக்களேயன்றி ஊ ஊதிய மூலம் அமர்த்தப்பெற்ற நிலையான அரசியற் பணிக்குழுவோ (Poid or Permanent Civil Service) மக்கள் மரபு வழக்காறும் (ஆங்கிலம்: Conventions) அவ்வக்கால மக்கள் மனமறிந்த கருத்துமாறுபாட்டு மரபுகளும் (Common Law) அன்றி வகுத்தியற்றப்பட்ட நிலைச்சட்டம் (Written or Codified or Statutory Law) அல்லது சட்ட ஆக்க முறையோ (Legislative Methods) கிடையாது. இவை முடியாட்சி மரபு ஊக்கிய பண்புகள் ஆகும்.

நாகரிக உலகில், இந்தியாவில், தமிழகத்திலே கூடக் கொங்குத் தமிழகமே சிறப்பு முறையில் குடியரசு மரபின் பிறப்பிடம், வளர்ச்சியிடம், அதன் சாவாமூவாக்கன்னி மலர்ச்சியாகிய உயிர் விதைப் பண்புக்குரிய இடம் என்று கூறத்தகும். ஏனெனில், அதன் வேள்புலப் பண்புகள் புற உலக, புறத்தமிழகத் தலையீடின்றி இயல்பாக வளரும் வாய்ப்புப் பெற்றால் அதன் விளைவு எவ்வாறு இருக்கும் என்பதை உலகின் இரு கோடிகளில் நிலவிவந்த அல்லது நிலவிவந்துள்ள இரு பரப்புகள் காட்டும். முதலது வரலாற்றாசிரியரால் பண்டைச் சமதருமப் பேரரசு (an Ancient Socialist Empire) என்றே பாராட்டப்பட்டுள்ள தென்அமெரிக்காவின் இங்காப் பேரரசு (கி.பி. 12-15 நூற்றாண்டுகள்) ஆகும். இது ஐரோப்பிய அரசியல் வேட்டைக்காரர்களாலேயே மீளா அழிவுக்காளாயிற்று. இரண்டாவதோ கடல் கடந்த இந்து சமய, இந்திய சமுதாயப் பரப்பு என்றே அறிஞரால் வருணிக்கப்படும் பாலித்தீவின் கலைவாழ்வுச் சமுதாயம் ஆகும். தற்கால மேலை நாகரிகம் என்னும் புயற் சூறாவளியினால் அது வாடி வதங்கத் தொடங்கியுள்ளது. இந்த இரண்டினையும் மங்கி மறுக வைத்த நாகரிகச் சூழல்களை வாங்கி (சப்பானியர் போல) விழுங்கி வளரும் கொங்குச் சமுதாயம் மேற்கூறியவற்றின் இயல்பான குறிக்கோள் நோக்கி இன்னும் மலர்ச்சியுறும் நிலை யுடையது என்னல் தரும்.

தமிழகத்தில் மூவரசுகள் வேளிர் இணைவாலேயே தோன்றி வளர்ந்திருந்தாலும், அம் மூவரசு நாடுகளின்