உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
88 ||

அப்பாத்துரையம் - 14



இத்தகைய இனங்களின் துணையாலேயே கடலாள முனைந்து வந்தனர் என்பது காணலாம். (திரையர் என்ற சொல் திராவிடம், எரித்ரேயம் அல்லது செங்கடல் நிலம், துரேனியம் அல்லது கிரேக்க கடற்பகுதி, எதுருசுக்கானம் அல்லது தொல் பழங்கால உரோமர் தாயகம் ஆகிய பெயர்களுடன் தொடர்புடைய தென்று திருத்தந்தை ஈராசு கருதியுள்ளார்).

குடியரசு முடியரசு மரபுகள் ஒரே மூல மரபில் தோன்றிப் பண்புகள் விரவப்பெற்றே வளர்ந்தாலும், அவற்றிடையே அடிப்படைப் பண்புகளிலும் பண்பு வளர்ச்சிப் போக்குகளிலும் ஆட்சியிலக்குகளிலும், பண்பிலக்குகளிலும் குறிப்பிடத்தக்க உயிர்நிலை வேறுபாடுகள் உண்டு. இவற்றுள் தலைமையானவை ஆள்வோர் ஆளப்படுவோர் வேறுபாடு கால இடம் கடந்த இன இலக்கு ஆகியவையேயாகும். ஏனெனில் குடியாட்சியில் குடிகளுக்காகவே, குடிவளத்துக்காகவே ஆட்சி அமைந்திருந்தது. முடியாட்சியிலோ ஆட்சி அல்லது ஆளுபவர் வளத்துக்காகவே நாட்டாட்சி என்ற நிலைமை உள்ளார வளர்ச்சியடைந்தது.யார் ஆள்வது என்பதைக் குடியாட்சியில் மக்களே முடிவு செய்வர். முடியாட்சியில் ஆட்சியாளரே அதனை முடிவு செய்ய முற்பட்டனர். இவ்வகையில் ‘மக்களால் மக்களுக்காக மக்கள் மூலமே நடத்தப்படுவது குடியாட்சி' என்ற குடியரசின் குறிக்கோளுக்கு முடியாட்சியைவிட, இன்றைய மறைமுக அரசியல் குடியாட்சியைவிட, பண்டைய நேர்முகச் சமுதாயக் குடியாட்சியே மிகப்பேரளவில் உகந்ததாயிருந்தது என்று காணலாம். ஏனெனில், பின்னதே இயல்பான குடும்ப விரிவாயமைந்த சமுதாய வாழ்வில் மலர்ந்து அதனுடன் வளரும் தன்மையுடையதாயிருந்தது. அத்துடன் அது கீழிருந்து மேலாக வளர்வது; முன்னதைப் போலவோ, முடியாட்சியைப் போலவோ அது மேலிருந்து கீழாக மக்கள் மீது சுமத்தப்படுவதன்று.

குடியரசு மரபில் ஆள்பவர் அல்லது ஆட்சித் தலைவர் (கோ அல்லது வேள்) குடிகளுள் ஒருவராய், முதற் குடிமகனாய், மற்றக் குடிமக்களுடன் குருதி மண வாழ்வுத் தொடர்புறவு காண்டவராய் அமைந்திருந்தனர். முடியாட்சியில் இத் தொடர்பு குன்றியதனாலேயே ஆள்பவர் அயலாராகக்கூட இருக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. அத்துடன் செயல்நிலையில்