உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 97

தாலிகட்டு இன்றைய வைதிகத் திருமணத்தின் ஒரு பகுதியாயினும் அது இன்றும் பண்டைத் தமிழகமாகிய, தென்னகத்திலேயே கொங்கு மையத்திலிருந்து நெடுந்தொலை பரவவில்லை. சங்க காலங்களில் தாலி தமிழகமெங்கும் வழங்கினாலும், சிறுவர் சிறுமியர் காப்பணியாக அரையிலும் கையிலும் கழுத்திலும் அணியப்பெற்றே வழங்கப்பட்டு வந்தது. ம் மங்கலக் காப்பணி, பெண்டிருடனும் மணமகளுடனும் மணவினையுடனும் தொடர்பு கொண்டது முல்லை நில நாகரிக ாழிக்குரிய பெண்டிர் அக ஆட்சிச்சின்னம் அல்லது பட்டம் என்ற முறையிலேயேயாகும். இது கொங்கு நாட்டில் பிறந்த மரபே என்று கருதத்தகும். ஏனெனில், இந்தியாவெங்கும் முல்லைநிலக் கற்பு நாகரிகம், வேளிர் மலர்ச்சியின்போது சமுதாய முறையில் ஆயர்மரபாகவும் சமய மரபில் வைணவ மரபாகவும் முற்றிலும் ஒதுங்கிவிட்டது. அவ்வாறு ஒதுங்காது முழுமரபாய் இயன்ற கொங்கு மரபிலேயே வேள்மரபு அல்லது வேளாள மரபு மக்களின் பொது மரபாக, மணவினை மரபாகப் பரவியிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. தாலியுடன் இணைந்த நெற்றிப்பட்ட மரபு இன்னும் குசராத்தி நாடளாவிப் பரவியுள்ள நிலை இதைச் சுட்டிக்காட்டுகிறது. தவிர, தமிழகத்திலேயே வேளாளர் மரபினிடையே கூட கார்காத்த வேளாளர் தாலியைத் திருமணத்துடன் இணைக்காமல், கன்னிப்பருவக் காப்பு விழா (விளக்கிடு கலியாணம்) என்பதனுடன் தொடர்புபடுத்தி வந்துள்ளனர் என்பது இங்கே குறிக்கத்தக்கது ஆகும். கேரள நாட்டு நிலையும் இதில் வேறுபட்டதன்று. மேலும் கொங்கு நாட்டில் திருமணத்தை வேளாளர் மரபுக் குருமாரே நடத்த, அம் மரபு மறந்து பிறநாட்டுப் பிறமரபினர் பிராமணர்களை வைத்து நடத்துவதும் கொங்கு நாட்டின் தாலிகட்டுப் பழமையை உணர்த்துகிறது.

கொங்குப் பரப்பின் குடியரசு மரபு வழிவந்த குடிமக்களின் உயிர் மலர்ச்சிப் பண்பு காரணமாக அதன் ஒத்திசைவுப் பண்பின் அடிப்படையாக உருவாக்கப் பெற்ற வைதிக இயக்கம், வைதிக நெறி என்ற பெயரால், தென்னகமெங்கும், இந்தியாவெங்கும் அப்பாலும் இந்திய சமுதாய அடிப்படையாக மட்டுமின்றிப் பழமையான இந்து சமயத்தின் புதிய அடிப்படையாகவும் புதிது பரவியுள்ளது, பரவிவருகிறது. கால வலிமையும் ஆட்சி