உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
124 ||

அப்பாத்துரையம் - 14



||


பட்டு விட்ட நிலையையே இது காட்டுகிறது. ஆரிய (அதாவது இந்தோ-ஐரோப்பிய இன)ப் பேராய்ச்சியாளரான அறிஞர் ராகுல் சங்கிருத்தியாயனர் (Volga to Ganga என்ற தம் ஆராய்ச்சி யடிப்படையான கலை ஏட்டில்) அவ்வினத்த வரிடையே உழவும் ஏரும் புதிது புகுந்த காலநிலையை (கி.மு.1000) நமக்குச் சித்திரித்துக் காட்டியுள்ளார். நாகரிக உலகில் உழவுக்கு முற்பட்ட ஐந்திணைச் சிறு பயிர்த் தொழிலுக்குரிய காலத் தொல் பழமையை து நமக்குக் கருத்துருவில் வழங்குவதாகும். ஏனெனில், ஆரியர் அதனை நாகரிக உலகில் வந்து கைக்கொள்வதற்குப் பன்னூறாண்டுகளுக்கு முன்னரே அது நாகரிக உலகில், சிறப்பாகத் தமிழகத்தில் பரவி விட்டதாதல் வேண்டும்.

தி

நாகரிக உலகில், ஆதி நாட்களில், உழவில்லாமலே, ஐந்திணைகளிலும், இயல்பான சிறுவளம் அல்லது செயல் முறையான சிறு பயிர்த் தொழில் வளங்கள் இருந்தன. இன்றைய நாகரிக உலகின் கூல வகைகள், காய் கனி பூ வகைகளில் பலவும் வளர்ப்பு விலங்கு புட்களில் பலவும், ஏரும் களைக்கொட்டும் வண்டிகளும் (சக்கரங்களும்) கூட அன்று கண்டுணரப்பட வில்லை. மேலே கூறியுள்ளபடி, குறிஞ்சி முல்லைப் படிகள் கடந்து, மனித இன நாகரிகம் மருத நிலத்தில் ஊன்றி ஐந்திணை யளாவப் பரவிய வேளாண்மை மலர்ச்சிக் காலத்திலேயே இவையாவும் உலகெங்கும் படிப்படியாக வளர்ந்தன. தொழில் (கூடி வினையாற்றுதல் தொழு, மாட்டுப்பட்டி; தொழுதி, கூட்டம்), பயிர், பயிர்ப்பு (நீடித்துப் பயின்று வருவது, நீண்ட காலம் பயிற்றுவித்துப் படைத்துருவாக்கி வளர்க்கப்படுவது; ஆயிரங்காலத்துப் பயிர் என்ற வழக்கு காண்க) என்ற தமிழ்ச் சொற்கள் இம் மலர்ச்சிகளையே சுட்டுகின்றன. இன்று ம் எல்லாவகை ஆற்றல்கள், திறங்கள், அறிவுகள் உடைய மக்களும் சிற்றூர்களிலிருந்து நகரங்களில் வந்து குழுமி மீண்டும் சிற்றூர்ப் பரப்புகளின் மீது ஆட்சி பரப்புவது போலவே, மருதநில ஐந்திணை மலர்ச்சியூழியிலும் பேருழ வாண்மை பெருந்தொழி லாண்மை ஆட்சித்திறலாண்மை அருந்திற அறிவாண்மை பண்பாட்சி ஆகியவற்றில் பயின்ற மக்கள் எல்லாத் திணைகளிலு மிருந்து மையத்திணையான மருதத்திணையிலமையப் பெற்ற ஐந்திணை நாட்டுத் தலைநகரங்களைச் சூழவந்து கூடி மீண்டும்