உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
134 ||

அப்பாத்துரையம் - 14



() || -


இந்தியாவின் மேல்கோடியிலும் (பாக்கிஸ்தானின் சிந்து மாநிலத் திலும்) கீழ் கோடியிலும் (வங்காள தேசத்திலும்) இந் நான்காம் வகுப்பு மரபு பரப்பப்படவில்லை. இதே பரப்புக்கள் சோழ, சாளுக்கிய ஆட்சிகளுக்கும் உட்படாது தமிழ் இந்திய நாகரிகப் பரப்பின் புறப்பகுதிகளாகவே அமைந்தன. இந்நிலையிலேயே இவ்விரு கோடிகளிலும் வரலாற்றுக் காலங்களில் இசுலாமும் அயற்பண்பாடுகளும், எளிதில் காலூன்றி, அவற்றை அணிமைக் காலங்களில் இந்தியாவின் அண்டை நாடுகளாக்க நேர்ந்தது.

கொங்கு நாட்டைப் போலவே தொண்டை நாடும் குடியரசுப் பரப்பாக அமைந்தபோதிலும், அது அம் மரபின் சமதருமப் பண்பை (வருணமுறை எதிர்ப்பை) விட சமய அறிவுப் பண்பிலேயே பெரிதும் கருத்தூன்றிற்று. பல்லவர் கால முதல் அது பண்டைக் குடியரசு கால இந்தியாவின் (தமிழ் அல்லது மாண்டுபட்டதாய் மொழிகளின்) கலை யறிவுப் பண்டாரங்களை புதிய வகுப்புக்குரிய சமக்கிருத சமய சாத்திர இலக்கியக் கருவூலங்களாக வளர்ப்பதில் முந்திடம் பெற்றது. அதே சமயம் அதுவே சமய எழுச்சிகளிலும் சைவ, வீரசைவ மலர்ச்சிகள் பரவாத நிலையிலும் வைணவ மலர்ச்சியை-அதுவும் சாதி வருண மரபு எதிர்ப்பு இன்றியே-கிழக்கிந்தி யாவில் பரவவிட்டது. இதனால் கீழ்திசை வைணவம் சாதி மரபின் எதிர்ப்பில் முனைப்புக் காட்டவில்லை. ஆயினும் பக்தி இயக்கம் இதனால் செறிவு குன்றிவிடவில்லை. ஏனெனில் சைவ மூவருக்கும் முற்பட்ட மணிவாசகரின் உறு முனைப்பான பக்தி இயக்கமும் ஆழ்வார் களின் செறிவான பக்திப் பண்பும் இத்திசைப் பக்தி இயக்கமாகப் பரவிற்று; மற்றும், இப்பரப்புகளிலேயே அன்னை வழிபாடும் நீடித்துள்ளது.

கொங்கு நாட்டின் மேல்பால் மேல் கடற்கரையும், அதன் மிகு தொலைவில் கீழ்பால் வங்கமும் தென் கிழக்காசியாவும், பெண்வழி ஆட்சித் தடம் முற்றிலும் மாறாமல் காத்துள்ளன. வேள்புலக் குடியரசு மலர்ச்சியின் ஆண் மரபு மலர்ச்சி முற்றிலும் சென்று பரவாத பரப்புகளே இவை. புதிய வகுப்பினைப் பெண்ணுரிமை மறுப்புக்குப் போராட வைத்த பரப்பு இதுவே என்னலாம். கல்வித் தெய்வம் (கலைமகள்), செல்வத் தெய்வம்