உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
146 ||

அப்பாத்துரையம் - 14



() ||-


வேட்டுவ மரபினரும் பிறரும் கொங்கு நாட்டுக்கேயுரிய தொல்பழங்குடிகளே யாவர் என்ற தம் முடிவை வலியுறுத்திக் காட்டினார்.

சங்கக்காலக் கொங்கு நாட்டு வரலாறு காண்பதில் பொதுவான காலவண்ணம் மட்டுமன்றி, காங்கு நாட்டுக்கேயுரிய தனிப்பட்ட கால மரபு வண்ணமும் தலையிட்டுத் தடுத்து வந்துள்ளது. கொங்காண்ட சேர சோழ மரபினருடன் கொங்கு மக்கள் பொதுவாகக் கொண்டிருந்த பாசம் சோழர் காலத்திலும் சோழருக்குப் பிற்பட்ட, காலத்திலும் தனிவளமும் வளர்ச்சியும் பெற்றது. ஏனெனில், அந் நாட்களில் கொங்கு நாடாண்ட கொங்குச் சோழர் கொங்குப் பாண்டியர் ஆகியோருடன் அவர்களின் கீழிருந்தும் தனியாகவும் சில பிற்காலக் கொங்கு சேரரும் ஆண்டனர். சங்க காலப் பெருங் கொங்குத்தமிழகம் தற்கால கொங்கு நாட்டு எல்லையளவாகக் குறுகி வந்த காலமும், கொங்கு நாட்டினுள் தமிழகச் சைவ சமய எழுச்சி முதலிலும், அதனையடுத்து பண்டை வடகொங்க அல்லது கன்னடப் பகுதியிலிருந்து வீரசைவ சமய எழுச்சியும் புகுந்து பரவிய காலமும் இதுவே. பழைய குடியரசு மரபுகள் பழைய எல்லை மரபுகள் மறக்கப்பட்ட இப்புதுச் சூழலிடையேதான் கொங்குநாடு சேர நாட்டின் ஒரு பகுதி என்ற கருத்தும் அதன் நாகரிகம் சேர சோழ நாட்டு நாகரிகத்தின் ஒரு புது நிழற்படிவே என்ற கருத்தும் மக்களிடையே மெல்லத் தோய்ந்து பரவின, பரவ விடப்பட்டன. தெய்வப்பாவலர் அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ் ‘சேரர் கொங்கு நாடு, சேரர் கொங்கு நன்னாடு' என்ற மணி முழக்கப் பாடல்களின் மூலம் இதனை மக்கள் மரபில் உறுதிப்படுத்த உதவிற்று.

நம் கால அணிமை நாட்களிலேயே இம் மரபை ஒட்டிக் கேரள மாநில ஆராய்ச்சியாளர் சிலரும் தமிழக ஆராய்ச்சியாளர் பலரும் கொங்கு நாடுதான் சேரநாடு (கேரளம் அன்று) என்றோ, சேரநாடு கொங்குநாட்டுப் பகுதி அல்லது கொங்கு நாடு சேர நாட்டுப்பகுதி என்றோ, கொங்கு நாட்டின் மேற்பகுதி சேரநாட்டுக்குரியது என்றோ வையல்ல என்றோ வாத

எதிர்வாத ஆய்வில் இறங்கினர். (அன்றைய புதிய மலையாள, புதிய தமிழக மொழித் தேசிய மரபுகள் இதற்கு நெய் வார்த்தன).