உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 149

கங்க மரபு அரசர்கள் இந்த அலைபாய்வின் முன்னணிச் செயல்வீரரேயாதலால் அவர்கள் வரலாறு இதனை நமக்குச் சுட்டிக் காட்டவில்லை. இவ்வலை பாய்வுக்குச் சற்று முன்னும், அதன் பின்னும் நிகழ்ந்த சோழ பாண்டியர் படையெடுப்புகளும் இதே நிலைக்கு உதவின என்பதில் ஐயமில்லை (இவை பின்னர் விளக்கப்பட விருக்கின்றன.)

தற்காலக் கொங்கு நாட்டின், சிறப்பாக அதன் வடபகுதியின் வளத்துக்கு நாட்டின் மரபு வரலாறுகளும் வரலாற்று ஆதாரங்களும் ஆர்வமுடன் விரித்துரைக்கும் சோழர் காலச் சீரமைப்பே காரணம் ஆகும் என்பதில் ஐயமில்லை. ஆனால், இச் சீரமைப்புக்கும் அதனால் நிரப்பப் பெற்ற டைக்காலப் பள்ளத்துக்கும் முற்பட்ட சங்க காலக் கொங்கு நாட்டு வளத்துக்கு இது போலவே ஒரு முந்திய சீரமைப்பு (வேள் புலத் தொடக்கக் கால வேளாண்மை மலர்ச்சியே) காரணம் ஆகும் என்று காணலாம். கால வண்ணம் தோயப்பெற்ற மரபு வரலாறுகள், நாட்டு மரபு வரலாறுகள் ஆர்வமுடன் சுட்டிக் காட்டாது மறந்துவிட்ட, மறக்கடித்து மறைத்த முந்திய சீரமைப்பே இது. குடியரசு மரபு மறக்கப்பட்டுவந்த கால மரபு வரலாறுகளும் ஆதாரங்களும் அவற்றினடிப்படையான ஆராய்ச்சிகளும், முந்திய குடியரசு மரபுக் காலத்திய முதல் சீரமைப்பை அறியாத நிலையில் அல்லது மறந்த நிலையில் அல்லது நோக்காத நிலையில், டைக்காலப் பள்ளத்தையே கொங்கு நாட்டின் தொல்பழமை நிலையாகவும், சோழர்கால மறுசீரமைப்பையே முதற் சீரமைப்பாகவும் (சங்க இலக்கிய நோக்காது) கொண்டது இயல்பேயாகும்.

கொங்கு வேளாளர் வரலாறு என மரபு வரலாறு ஆய்ந்து தொகுத்துள்ள அறிஞர் செல்வி டி. கே. சக்தி தேவியார், அம் மரபு வரலாற்றாசிரியர் வழி நின்று அதற்குரிய ஆதாரங்களையே பின்பற்றி, கொங்கு வேளாளரின் மூலத்தாயகம் சோழ நாடே எனக்கொள்கிறார். சோழ கொங்குப் பரப்புகளில் ஓடும் காவிரியாற்றின் தெற்கிலுள்ளவர்கள் தென்தலை வேளாளர், வடக்கிலுள்ளவர்கள் வடதலை வேளாளர் என்றும் தென்தலையினரே தலைமை நிலையுடையவரென்றும் அவர்