உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 161

தமிழ்: சாத்து-இறைப்படிவ ஒப்பனை, உழவர் கூட்டம், வணிகர் கூட்டம், அரசர் சுற்றம்; சாத்துப்படி, கோயிற்கட்டளை) வேட்டையாடுதலும் (கொடுவிலங்குகளை அழித்தலும்) செண்டாட்டமும் (Polo: குதிரைமீது கவர்ந்து ஆடும் பந்தாட்டம்) சிறந்த வீரப்பயிற்சிகளாகக் கருதப்பட்டன. (தற்கால அகல் உலக அகழ்வாராய்ச்சியாளர் இச் செண்டாட்டத்தின் கி.மு. 4000ஆண்டுகளுக்குரிய பிறப்பிடமாக வடமேற்குப் பாரசீக நாட்டைக் குறிக்கின்றனர்.) தென்னக மெங்கும் ஐயனார் கோயில் வெளியில் பக்தர்களால் நேர்ந்து நிறுத்தப்பட்டுள்ள பாரிய மரக் குதிரைகள் ஐயனாரின் ஊர்காவலுக்கு மட்டுமன்றி, அவருக்குரிய செண்டாட்டக் கேளிக்கைக்கும் உரியதாகும். அத்தெய்வத்தையும் அதன் மரபில் வந்த (சிவகங்கை மருது பாண்டியர் போன்ற) அரசரையும் தமிழ்ப்புலவர் செண்டலங்காரர் என்று பாடுவ துண்டு. செண்டாட்டமாகிய குதிரைப் பந்தாட்டத்துக்குரிய மட்டை வடிவே அரசர் கைக்கோலாகவும், (கோதண்டம்,பாரதப் போரில் வீமனின் கதாயுதம் அல்லது தண்டம்) அவ்வடிவிலுள்ள பூஞ்செண்டாகவும் மலர்ச்சியுற்றது. (மணம் Scent என்ற ஆங்கிலச் சொல்லின் திரிபு என இதை தவறாகக் கொள்பவர் உண்டு)

வேளாளர்-வேட்டுவர் மரபின் பொதுத் தெய்வமாகவும், வேட்டுவ மரபினரின் சிறப்புத் தெய்வமாகவும் விளங்கும் வடுகநாதர் அல்லது வைரவர் வேட்டையுடன் மிகு தொடர் புடையவர் என்பதை அவரது வேட்டைநாய் ஊர்தி காட்டும். வீரபத்திரக் கடவுளுடனும் ஐயனாருடனும், முருகனின் துணைவனான வேளைக்காரனும், தமிழக மன்னரின் வேளைக்காரப்படையும் (பாண்டி நாட்டுச் சாவேர்ப்படை, அதாவது சாவேற்புப்படை) ஒரே தெய்வ மரபுத் தொடர்புடைய தாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னக இந்திய உலக வேள் மரபு முழுவதிலும் காணப் படுகிற, ஆனால், தமிழக வேளாளர் மரபில் அவ்வளவாகக் காணப்பெற இயலாத வீரமரபினை நாம் கொங்கு நாட்டு வேளாளர், வேட்டுவர் ஆகிய இரு மரபுகளிலுமே ஒப்பக் காண்கிறோம். இரு மரபுகளும் ஒரே இணைமரபாய் முடியரசு ஊழி வரலாற்றால் மட்டுமே பிரிக்கப்பட்ட கிளையினமரபுகள்