உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
188 ||

அப்பாத்துரையம் - 14



நக்கீரரின் அகப்பாட்டு (253) ஒன்று பசும்பூட் பாண்டியன் கொங்கரைத் தாக்கித் துரத்தி நாட்டை நண்பர்களுக்குப் பிரித்தளித்தான் என்று கூறுகிறது.

‘வாடாப் பூவிற் கொங்கர் ஓட்டி நாடு பல தந்த பசும்பூட் பாண்டியன் பொன்மலி நெடுநகர் கூடல் ஆடி இன்னிசை ஆர்ப்பு....

பாண்டியன், கொங்கு வேளாள மரபினரைக் கொங்கு நாட்டின் தென் பகுதியிலிருந்து துரத்திவிட்டு, வேட்டுவ மரபினரை அப்பகுதிகளில் குடியேற்றியதனை இது குறிப்பதாக மரபு வரலாறுகள் காட்டுகின்றன. இப் பாட்டில் நெடுமிடல் பெயர் குறிக்கப்படவில்லை. அவன் இம்முயற்சியில் முந்துற இறந்துவிட்டதனாலே இப்பாட்டில் இறுதி வெற்றிக்குரிய மதுரை மக்கள் ஆரவாரமும், மற்றொரு குறுந்தொகை(393)ப் பாட்டில் அவன் மாள்வும் கொங்கர் குறிக்கப்படுகின்றன என்று அவர்கள் கொள்வர்.

'கூகைக் கோழி வாகைப் புறந்தலைப்

பசும்பூட் பாண்டியன் வினைவல் அதிகன்

களிறொடு பட்ட ஞான்றை

ஒளிறுவாள் கொங்கர் ஆர்ப்பு’

ஆரவாரமும்

அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி மேற்கண்ட குறுந்தொகைப் பாட்டு, கீழ்வரும் அகப்பாட்டு (142) ஆகிய

ரண்டையும் இணைத்து, இவ் வதிகமான் மாள்வு நன்னன்

படைத்தலைவனான மிஞிலியால் நேர்ந்தது என்று கொள்கிறார். குறுந்தொகைப் பாட்டில் வரும் கொங்கர் என்பதை அவர் கொண்கர் (அதாவது கொண்கானத்தவர்) எனக் கொள்வர். (அகப்பாட்டும் நெடுமிடல் பெயர் கூறவில்லை.)

'கறையடி யானை நன்னன் பாழி ஊட்டரு மரபின் அஞ்சுவர, பேஎய்க்

கூட்டெதிர் கொண்ட வாய்மொழி IDL

புள்ளிற் கேமமாகிய பெரும் பெயர்