உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 189

வெள்ளத்தானை அதிகன் கொன்று வந்து

ஒள்வாள் அமலை ஆடிய...."


தகடூர் வேளிருள் பெரும்புகழ் நிறுவியவன் அதியமான் நெடுமான் அஞ்சியேயாவன். அவன் சங்ககால வள்ளல்கள் எழுவரில் ஒருவன். கொங்கு நாட்டின் கவிப் பேரரசியான ஒளவையார் அவன் அவன் அருந்துணைவராகவும், அவைப் புலவராகவும், அவன் அரசியல் தூதமைச்சராகவும் விளங்கினார். அவரும் பிற சங்கப் புலவோர்களும் அவன் வீரத்தையும், வெற்றிகளையும், கொடைப் பண்புகளையும் வாயாரப் பாராட்டியுள்ளனர்.உண்டவரை நெடுநாள் வாழச் செய்யும் அரு நெல்லிக்கனி ஒன்று அவனுக்குக்கிடைத்தபோது, அதனை அவன் தானுண்ணாது ஒளவையாரை உண்பித்து, அவர் உண்ட பின்னரே அதன் அருமை தெரிவித்தான். இச்செயற்கரும் செயல் கண்டு உவகையும் நன்றிப் பெருக்கும் மீதூரப் பெற்ற அக்கவிஞர் பெருமாட்டி,

நீலமணிமிடற் றொருவன் போல

மன்னுக பெரும, நீயே!

என்று அவனை மனமுருக வாழ்த்தினார்.

(புறம் 91)

அதியமானின் இவ்வருஞ்செயலையும் அவன் முன்னோர் கரும்பு தருவித்த புகழையும் இணைத்துக் கொங்கு மண்டல சதகம் பாடுகிறது.

'சாதலை நீக்கும் அருநெல்லி தன்னைத் தமிழ்ச் சொல் ஔவைக்கு ஆதரவோடு கொடுத்தவன், கன்னலை அங்கு நின்று

மேதினி மீதில் கொடுவந்து நட்டவன்மேன்மரபோர்

மாதிரம் சூழ் அரண் மேவுவதும் கொங்கு மண்டலமே!’

அதியமான் அஞ்சிக்கு, அவனைப்போலவே வள்ளல் களாகவும் வேளிர்களாகவும் விளங்கிய கொல்லிமலை வல்வில் ஓரியும், மலையமான் திருமுடிக்காரியும் முறையே உயிர் நண்பராகவும் உயிர்ப் பகைவராகவும் விளங்கினர். அதியமான் பின்னவனைத் தாக்க எண்ணி, முதலில் காஞ்சியாண்ட தொண்டைமான் இளந்திரையனின் நட்பை உறுதி செய்து கொள் வதற்காக அவனிடம் ஔவையாரைத் தூதுவராக அனுப்பினான்.