உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 203

(

பிறசெய்திகள் காரணங்களாக இருந்திருக்கலாம் என்று கருதத் தகும்.

இவ்வெல்லா முறையிலும் கொங்குச் சேரப் பேரரசின் முழு மரபு வரிசை விவரமும் அதன் காலக் கணிப்பும் தெளிவாகக் கண்டு உருவாக்கப்படும் வரை, அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமியின் மரபு வரிசைத் தொடர்பும் காலக் கணிப்புமே இங்கே தற்காலிகமாகப் பின்பற்றப் படுகின்றன.

தொண்டை நாட்டைப் போலக் கொங்கு நாடு, மூவரசு நாடுகளுக்கு ஒதுங்கியிருக்கவில்லை. அதன் நடு நிலையிடம் காரணமாக அது அவற்றினிடையே நடைபெறும் போட்டிகளுக்குரிய மையப் போர்க்களமாகவே நிலவிற்று. ஆனால், எந்த ஓர் அரசரும் அதனை வெல்ல விடாமல், மற்ற இரு அரசரும் எப்போதும் கொங்கு வேளிருக்கு ஆதரவு காட்டி வந்த நிலையில், இப்போட்டியே கொங்கு நாட்டின் தன்னாண்மை நிலையை நெடுநாள் பேணியிருத்தல் வேண்டும் எனலாம். ஆனால், பதிற்றுப்பத்தின் சேர மரபினர், அவர்களின் தாயாதியரும் இளங்கிளையினருமாகிய கொங்குச் சேர மரபினர் ஆகியோர் நாட்களில் இந் நிலை மாறிற்று. ஏனெனில், ஒருபுறம் இக் காலத்தில் தமிழக அரசரிடையே சேரர், கொங்குச் சேரர் ஆற்றலே மேலோங்கியிருந்தது. மறுபுறம் சேரரின் உள்ளார்ந்த குடியாட்சி மரபுப் பண்பு,தொடக்கத்திலிருந்தே நேரடியாட்சியில் முளையாமல், ஒரு கிளைக் கொங்குச் சேர மரபை உருவாக்கி அதன் மூலமே வென்றாள முற்பட்டது.அத்துடன் மூன்றாவதாக, அவர்கள் தம் அரசாண்மைத் திறம் (அரசியல் சூழ்ச்சி நயம்), மண உறவு, நட்புறவுகள் மூலம் வேளிரிடையே போட்டியும் பிளவும் ஊக்கி, அவற்றைப் பயன்படுத்தினர்.

அந்துவன் சேரல் இரும்பொறை அல்லது கருவூரேறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை (குத்தாயமாக 20 ஆண்டு ஆட்சி; கி.பி.92-112) கொங்குப் பேரரசினைத் தோற்றுவித்த முதல்வனும் அதன் முதல் அரசனும் ஆவான் என்று கூறத்தகும். இவன்

வன் பதிற்றுப்பத்து மரபில் மூத்த சேரர் குடியின் முதலரசனான உதியன் சேரலின் தாயாதி உடன் பிறப்பாளன் ஆவன். அத்துடன் மேலே சுட்டியுள்ளபடி உதியன் சேரலின் ளைய புதல்வனான பல்யானைச் செல்கெழுகுட்டுவன்,