உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 209

(

இப்பேரரசன் திருமாலை வழிபட்டவன். ஓகந்தூர் என்ற ஊரை அவன் திருமால் கோயில் ஒன்றுக்கு இறைக் கொடையாக வழங்கினான்.வேள்விகள் பல செய்தவனென்றும், பிராமணர்க்குப் பொன்னும் பொருளும் ஏராளமாக அளித்தவன் என்றும். கபிலர் அவனைப் பாடுகிறார். அவன் தன் புரோகிதனை விடப் பன்மடங்கு அற நெறியில் மேம்பட்டவ னாக விளங்கினான் என்றும் பாராட்டப்படுகிறான். ப்ராசரன் என்னும் வேத விற்பன்னன் வேதமோதும் திறமையில் வெற்றிக் கொடி நாட்டி, அவ்வகையில் மூத்தவழிச் சேரர்களான நெடுஞ்சேரலாதன், பல்யானைக் குட்டுவன் ஆகியோரிடம் பரிசு பெற்றது போலவே, கொங்குப் பெருஞ் சேரனான செல்வக் கடுங்கோவிடமும் வந்து பரிசில் பெற்று மகிழ்ந்தான் என்று சிலம்பு கூறுகிறது.

இப்பேரரசனுக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள் என்று பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது.

பெருஞ்சேரல் இரும்பொறை அல்லது தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை (17 ஆண்டு ஆட்சி: கி.பி.137-154) செல்வக் கடுங்கோவின் புதல்வர்களில் மூத்தவன். கொங்குப் பேரரசு இவன் காலத்திலேயே அதன் புகழின் உச்சநிலையைச் சென்றெட்டிற்று என்னலாம். அவன் போர் வெற்றிகளையும் போர் வெற்றிப் புகழையும் முன்னிட்டுப் புலவர்களால் அவன் 'கொடித் தேர்ப் பொறையன்,' 'சினப் போர்ப் பொறையன்', 'பொலந்தேர் யானை இயல் தேர்ப் பொறையன்’, ‘புண்ணுடை எறுழ்தோள் உடையவன் (எறுழ்-வல்லமை) என்று பலபடப் பாராட்டப் பெறுகிறான்.

வரலாற்றுப் பெரும்புகழ் சான்ற தகடூர் வெற்றியின் பின் இப் பேரரசன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சிறப்பு விருதுப் பட்டத்தால் குறிக்கப்படுகிறான்.

பெருஞ்சேரலிரும்பொறையின் ஆட்சிக்குரிய முப்பெருஞ் செயல்கள் மேற்கண்ட காமூர், கொல்லிமலை, தகடூர் ஆகிய கொங்குத் தமிழகத்தின் முப்பெரு வேள்புலங்களைத் தாக்கி அவன் மேற்கொண்ட வெற்றிகள் ஆகும். ஏற்கனவே விரித்துள்ள படி, பதினான்கு வேளிரின் பக்கத்துணையுடன் அவன் காமூர் வேள் கழுவுளின் உறுதி வாய்ந்த கோட்டை நகரையும்