உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 231

(

வாய்மையையோ, அறிவுத் திட்ப நுட்பத்தையோ சேக்சுப்பியர், கம்பர் போன்ற வானுயர் புகழ்க் கவிஞரிடம் கூட யாரும் எதிர்பார்க்க முடியாது, எதிர்பார்க்கவும் மாட்டார்கள். ஆனால் சங்க இலக்கியத்தில் நாம் மருத்துவன் தாமோதரனார், கணிமேதாவியார், புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் போன்ற தனி அறிவுத்துறை வல்லுநர்களான புலவர்களிடையே மட்டுமன்றி, எல்லாப் புலவர்களின் எல்லாப் பாடல்களின் பின்னணியிலுமே இத்தகைய வாய்மையையும் அறிவுத் திட்ப நுட்பத்தையும் அப்பழுக்கற்ற நிலையி லேயே காண்கிறோம். தற்கால மேலையுலக அறிவியல் புலமை வாய்ந்த அறிவாராய்ச்சி யறிஞர்களே (அறிஞர் பி.எல். சாமி போன்றோர்) இவற்றை ஆராய்ந்து கண்டு வியந்து போற்றுகின்றனர்.

சங்க காலத் தமிழகத்தில் இத்தனித்துறை அறிஞர் களுக்குரிய அறிவு வளத்துக்கான கல்வி நிறுவனங்கள் (பல்கலைக் கழகங்கள்), இவற்றின் மரபும் விரிவும் வளமும் நீடிக்கும்படி வளர்த்த தேசியக் கலையாட்சி நிறுவனங்கள் (Departments of National and Popular Education) ஆகியவைகள் இருந்திருக்க வேண்டும். மக்களிடையே இவ்வளம் நிலவுவதற்கு ஆதார மாக, அவர்கள் வாழ்க்கைத் தரம், செல்வ வளம், உழவு, கல்வி வளம் ஆகியவை நீடித்து வளர்வதற்குரிய ஆட்சி அமைப்புகள் (Political, Social and Industrial Equipments) நிலவியிருக்க வேண்டும்.

இன்றைய நாகரிக உலகின் தற்கால நாகரிக ஊழிகளில்கூட, கல்வியின் குறிக்கோள் எல்லா மக்களுக்கும் எண்ணெழுத்தறிவு (Universal Literacy) என்பது மட்டுமே, பொதுமக்களுக்கு இது தரும் தொடக்கக் கல்வி (Elementary Education), நடுத்தர மக்களுக்கு வருவாயும் தொழிலீடுபாடும் வழங்கும் இடை டைத்தரக் கல்வி (Secondary Education), உயர் ஆட்சி வகுப்பினர் அல்லது இன அறிவு வகுப்பினருக்கான உயர்தர அல்லது பல்கலைக்கழகக் கல்வி (Higher or University Education) என்ற மூவகுப்பு முறைக் கல்வியே தேசிய இலக்கு, நாகரிக இலக்காகியுள்ளது. தமிழரிலக்கு, வள்ளுவ இலக்கு இதுவன்று, மனித இன அறிவு வளர்ச்சியே என்பதை