உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

அப்பாத்துரையம் - 19

இலக்கியம் மேலையுலகுக்கு அளித்த பரிசு. சமய நம்பிக்கை; இயேசு பிறந்த யூத இனமும் பாலஸ்தீனமும் அளித்த கொடை. மூன்றாவதே ஐரோப்பாவில் இயல்பாகத் தோன்றிய, அல்லது இவ்விரண்டினாலும் தூண்டப்பட்ட அறிவு வளர்ச்சி.

மாத்யூ ஆர்னால்டு கிரேக்கப் பண்பாட்டில் மட்டுமீறிய பக்தி பூண்டவர். அதன் பரிசைச் சற்று மிகைபடவே கூறியுள்ளார் என்பதைப் பலர் ஒத்துக் கொள்வர். ஆயினும், கூர்ந்து நோக்கினால், அவர் மிகையுரை மெய்யை ஒட்டிய மிகையுரையே யாகும். ஏனெனில், கிரேக்கரிடம் இனிமை, கலைப்பண்பு முனைப்பாய் இருந்தது. ஆற்றல் பண்பு, அல்லது கட்டுப்பாடும் உதவியும் ஒற்றுமையும் தற்பண்பும் நலிந்திருந்தன. கிரேக்கர் அழிவுக்குக் காரணம் இதுவே. ஆனால், பிந்திய பண்புகள் உரோமரிடம் முனைப்பாய் இருந்தன; முந்திய பண்புகள்

ல்லாமையே அவர்கள் பேரரசப் பெருவாழ்வைச் சரிய வைத்தது.மூன்றாவது பண்பு, அதன் பெயர் தெரிவிக்கிறபடி நடுக் கடலகத்தின் வாணிக நாகரிகமாகிய பில்கஸ்தீனர் நாகரிகப் பண்பு அதுவும் மற்ற இருபண்புகளும் இல்லாமலே அழிந்தது.

று

மூன்று பண்டை நாகரிகங்களில் ஒரு பண்பு குறைந்திருந்தது. அதுதான் சமத்துவ மெய்யறிவு, அன்புப் பண்பு. கிறித்துவ சமயம் மேலையுலகுக்கு ஒரு சிறிதேனும் அளித்த பண்புக் கூறு இதுவே.

திராவிட நாகரிகத்திலும், சங்க இலக்கியத்திலும் நாம் கிட்டத்தட்ட இந்த மூன்று பண்புகளையுமே காண்கின்றோம். பகுத்தறிவுப் பண்பு, கலைப்பண்பு, அன்புப் பண்பு ஆகிய மூன்றுமே திருவள்ளுவரின் திருக்குறளில், உலகில் வேறு எந்த இனத்திலும், நாகரிகத்திலும், இலக்கியத்திலும், கோட்பாட்டிலும் இல்லாத அளவு இணைந்திருக்கின்றன. ஆனால், இவ் ஒப்பற்ற கருவூலத்தைப் பெற்றிருந்தும் தமிழகம் வீழ்ந்துள்ளது-கீழ்த்திசை விழக் கண்டுள்ளது. இஃது எதனால்?

இயல் நூலாராய்ச்சி மேலையுலகில் தழைத்த அளவுகூடக் கீழ்த்திசையிலோ தமிழகத்திலோ தழையவில்லை. மேலையுலகம் தந்த பரிசாகக்கூட வளர முடியவில்லை. இஃது ஏன்?

முதலாவது, திருவள்ளுவர் திருக்குறள் கருத்துகளை, அதற்கு மாறான கருத்துகள் மலிந்த கீழ்த்திசை இலக்கியங்கள்,