உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




83

7. கி. பி. 1190 முதல் கி. பி. 1310 முடிய ஆட்சிபுரிந்த பாண்டியர்கள்

கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டியரது ஆட்சி மீண்டும் உயர்நிலையை அடையத் தொடங்கியது. ஆயினும், அந்நாட்களில் பெருவீரனாகிய மூன்றாங் குலோத்துங்க சோழன் சோழ இராச்சியத்தில் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தமையால், பாண்டி வேந்தன் அவனுக்கு அடங்கி நடத்தல் இன்றியமையாததாயிற்று. அவன் கி.பி. 1218 ஆம் ஆண்டில் இறந்த பின்னர், பாண்டியர் சோழச் சக்கரவர்த்திகளுக்குத் திறை செலுத்தாமல் தனியரசு புரியும் பேரரசர் ஆயினர். அதற்கேற்ப அக்காலத்தில் சோழநாட்டில் ஆட்சிபுரிந்து கொண்டிருந்த மூன்றாம் இராசராச சோழனும் வலிகுன்றிய வேந்தனாயிருந்தான். ஆகவே, பாண்டியர் பேராண்மையும் பெருவீரமு முடையவர்களாகிப் பிற நாடுகளை வென்று, பாண்டிய இராச்சியத்தை நெல்லூர் கடப்பை ஜில்லாக்கள் வரையில் வடபுலத்திற் பரப்பி, மிக்க உயர்நிலையை எய்தி வாழ்ந்த காலம் இதுவே என்று ஐயமின்றிக் கூறலாம். எனவே, இக்காலப்பகுதி பாண்டியரது இரண்டாம் பேரரசு நிலைபெற்றிருந்த சிறப்புடையதாகும்.

ப்பகுதியில் ஆட்சிபுரிந்த பாண்டி மன்னர்களின் கல்வெட்டுக்கள் யாண்டும் மிகுதியாகக் காணப்படுகின்றன. அவற்றால் அவ்வேந்தர்களும் பிறரும் புரிந்த அறச்செயல்களும், வேறுபல செய்திகளும் நன்கறியப்படுகின்றன. ஆனால் அக் கல்வெட்டுக்களின் துணைகொண்டு, அப்பாண்டி வேந்தர் களின் தந்தைமார் உடன்பிறந்தார் முதலானோர் யாவர் என்பதை ஆராய்ந்தறிய இயலவில்லை. அவர்களுடைய செப்பேடுகளும் அச்செய்திகளை உணர்த்துவனவாயில்லை. அன்றியும், எவ் வரசனுக்குப் பின்னர் எவ்வரசன் அரசாண்டான் என்பதைத் தெளிவாக அறிந்துகொள்வதற்கும் அவை பயன்பட