உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

81

கி.பி. 1180-ஆம் ஆண்டில் அச்சோழ மன்னன் பாண்டி நாட்டின் மேல் படையெடுத்துச் சென்று வீர பாண்டியனோடு போர் புரிவானாயினன். அப் போரில் இப்பாண்டி வேந்தனுடைய புதல்வன் ஒருவன் இறந்தனன். இவனுடைய ஏழகப்படைகளும் மறவர் படைகளும் எதிர்நின்று போர் புரிய முடியாமல் புறங்காட்டி ஓடின. இவனுக்கு உதவிபுரிய வந்த ஈழநாட்டுப் படைகளும் தோல்வியுற்று இலங்கைக்கு ஓடிவிட்டன. குலோத்துங்க சோழன் பெரும் வெற்றி எய்தி, மதுரையும் அரசும் நாடுங்கொண்டு அவற்றைத் தன்பால் அடைக்கலமடைந்த விக்கிரம பாண்டியனுக்கு அளித்தனன்.' கி.பி.1180

ல் வீரபாண்டியன் தன் நாட்டை இழந்த பின்னர் மலைநாட்டிற்குச் சென்று, சேரமன்னன் உதவிபெற்று அதனை மீட்க முயன்றான்; அவன் அனுப்பிய சேரநாட்டுப் படையோடு சிதறிக்கிடந்த தன் படையையும் சேர்த்துக் கொண்டு மதுரைமீது படையெடுத்துச் சென்றான். அதனை யறிந்த குலோத்துங்க சோழன் பெரும் படையோடு சென்று மதுரைக்குக் கிழக்கேயுள்ள நெட்டூரில் இவ் வீரபாண்டியனைத் தடுத்துப் பெரும்போர் புரிந்தான். அப்போரில் பாண்டியன் படையும் சேரன் படையும் தோல்வி எய்திச் சிதறிப் போயின. வெற்றிபெற்ற குலோத்துங்க சோழன் பாண்டியர்க்குரிய முடியைக் கைப்பற்றிக் கொண்டான். வீரபாண்டியன் தன் முயற்சி பயன்படாமை கண்டு பெரிதும் வருந்தித் தன் உரிமைச் சுற்றத்தினரோடு மலைநாடு சென்று சேரன்பால் அடைக்கலம் புகுந்தனன். வீரபாண்டியனுக்கு உதவிபுரிந்தமைபற்றிக் குலோத்துங்க சோழன் தனக்கு ஏதேனும் தீங்கிழைத்தல் கூடும் என்றஞ்சிய சேரமன்னன், இவனையும் இவன் மக்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு சோணாட்டிற்குச் சென்று, எல்லோரும் ஒருங்கே குலோத்துங்க சோழன்பால் அடைக்கலம் புகுந்தனர். அவன் எல்லோரையும் அன்புடன் ஏற்றுக்கொண்டு,

1. Ins 190 of 1904.

2. S. I. I., Vol. III, No. 86 and 87.

.

3

3. S. I. I., Vol. VII, No. 797; Inscriptions of the Pudukkottai State, No. 166. நெட்டூர் என்பது இராமநாதபுரம் ஜில்லா சிவகங்கைத் தாலூகாவிலுள்ள இளையான்குடிக் கண்மையில் உள்ளது.