உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




86

1

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2 குலசேகர பாண்டியன் தன் மறப்படை ஏழகப்படைகளுடன் வந்து அவனை எதிர்த்துப் போர் புரிந்தான். மட்டியூர், கழிக் கோட்டை என்ற ஊர்களில் பெரும் போர்கள் நடைபெற்றன.' பாண்டிப்படைகள் பேரழிவிற்குள்ளாகிப் புறங்காட்டி ஓடிவிடவே, குலசேகர பாண்டியன் தோல்வியுற்றுத் தன் உரிமைச் சுற்றத்தினருடன் மதுரையை விட்டு வேறிடஞ் சென்று ஒளிந்துகொள்ளும்படி நேர்ந்தது. குலோத்துங்க சோழன் தன் படையுடன் அந்நகருக்குள் புகுந்து அரண்மனையில் சில மண்டபங்களை இடித்தும் சிலவற்றை அழித்தும், தன் பெருஞ்சினத்தை ஒருவாறு தணித்துக் கொண்டான். பிறகு, அவ்வேந்தன் தான் எண்ணியவாறு அத்தலைநகரில் 'சோழ பாண்டியன்' 'திரிபுவன வீரதேவன்' என்னும் பட்டங்களுடன் வீராபிடேகஞ் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சிகள் கி. பி. 1202-ஆம் ஆண்டிலாதல் அதற்கு முன்ன ராதல் நடைபெற்றிருத்தல் வேண்டும். சோழமன்னன், தான் வென்று கைப்பற்றிய பாண்டி நாட்டைச் சில ஆண்டுகளுக்குப் பிறகு இக்குலசேகர பாண்டியனுக்கே அளித்துவிட்டனனென்று தெரிகிறது. குலோத்துங்க சோழனது ஆட்சியின் 39, 40 ஆம் ஆண்டுகளில் வரையப்பெற்ற கல்வெட்டுக்கள் பாண்டி நாட்டில் காணப்படுவதால் இப்பாண்டி வேந்தன் அவனுக்குக் கீழ்ப்படிந்து அந்நாட்டை ஆட்சிபுரிந்து வந்தனனாதல் வேண்டும். எனவே, கி.பி. 1218 ஆம் ஆண்டுவரையில் இவன் சுயேச்சையாகத் தனியரசு செலுத்த இயலாத நிலையில் இருந்திருத்தல் வேண்டும் என்பது தேற்றம்.

இம்மன்னன் தன் தலைநகராகிய மதுரையம்பதியிலிருந்த சிங்காதனங்களை மழவராயன், காலிங்கராயன்,5 என்னும்

1. மட்டியூர் என்பது இராமநாதபுரம் ஜில்லா திருப்பத்தூர்த் தாலூகாவில் சதுர்வேதிமங்கலம் என்ற பெயருடன் இக்காலத்தில் இருத்தல் அறியத்தக்கது. (Ins. 298 of 1927-28) 2. Inscriptions of the Pudukkottai State, No. 166.

-

3. Ins.554 of 1904. திருவாரூரில் காணப்படும் மூன்றாங் குலோத்துங்க சோழனது 24 - ஆம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டில் அவன் மதுரையில் புனைந்து கொண்ட திரிபுவன வீரதேவன் என்ற சிறப்புப் பெயர் வரையப் பெற்றிருத்தலால் இவ்வாண்டு உறுதிஎய்துகின்றது.

4. Ins.550 of 1916.

5. Ins. 540 of 1916. S. I. I., Vol. V, No. 302.