உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

93

என்னும் இவனது மெய்க்கீர்த்தியின் ஒரு பகுதியினால் நன்கு உணரலாம்.

இப்பாண்டி வேந்தன் தான் கைப்பற்றிய சோழ நாட்டைச் சில திங்களுக்குள் இராசராசசோழனுக்கு அளித்து விட்டமைக்குக் காரணம், போசள மன்னனாகிய இரண்டாம் வல்லாளதேவனும் அவன் மகன் வீரநரசிம்மனும் அச்சோழ அரசனுக்குப் பல்வகையாலும் உதவி புரிய வந்தமையேயாம். அன்னோர் உதவியும் முயற்சியும் இல்லையாயின் இவ்வாறு சுந்தரபாண்டியன் சோழநாட்டை அவனுக்குத் திரும்பக் கொடுத்திருக்கமாட்டான் என்பது தேற்றம். இச் செய்தியை உருத்திரப் பட்டர் இயற்றிய சகநாதவிசயம் என்ற கன்னட நூலாலும் அப்போசள அரசர்களின் கல்வெட்டுக்களாலும் நன்குணரலாம்.

பாண்டி நாட்டில் இச்சுந்தரபாண்டியன் அரசாண்டு கொண்டிருந்த காலத்தில் கொங்கு நாட்டு வேந்தர்களுக்குள் பகைமை யுண்டாயிற்று. அதனால், பல இன்னல்களுக் குள்ளாகிய வட கொங்கு மன்னன் நம் சுந்தரபாண்டியன்பால் அடைக்கலம் புகுந்து தனக்கு உதவி புரியுமாறு வேண்டிக் கொண்டான். பிறகு தென்கொங்கு மன்னனும் தன் பெரும் படையுடன் வந்து இப்பாண்டியனை வணங்கவே, இவன் ருவரையும் அன்புடன் வரவேற்று, சில நாட்களுக்குப் பின்னர் அன்னோரை அச்சுறுத்தித் தன் முடிபினை ஏற்றுக் கொள்ளும் படி செய்து அவர்கள் முரண்பாட்டை ஒழித்தனன். இந் நிகழ்ச்சிகளை விரிவாக அறிய இயலவில்லை. எனினும், கொங்கு வேந்தர்கட்கும் பாண்டியர்கட்கும் பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் உறவும் நட்பும் நிலைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.'

இனி, சில ஆண்டுகட்குப் பிறகு இப் பாண்டி வேந்தனுக்கும் மூன்றாம் இராசராசசோழனுக்கும் முரண்பாடு தோன்றியது. அதற்குக் காரணம் அச் சோழமன்னன் இவனுக்குத்

1. Ins. 336 of 1927-28; S. I. I., Vol. V, No. 421; Ins. 672 of 1916.