உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




96

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

1. சோழன் உய்ய நின்றாடுவானான குருகுலத்தரையன்

வன் சுந்தரபாண்டியனிடத்தில் அமைச்சனாக விளங்கிய பெருமையுடையவன்; தடங்கண்ணிச் சிற்றூரில் பிறந்து வளர்ந்தவன்; இராமநாதபுரம் ஜில்லா திருத்தங்காலிலுள்ள திருமால் கோயிலையும் சிவன் கோயிலையும் கி. பி. 1232-ல் கற்றளிகளாக எடுப்பித்தவன்.' அன்றியும், திருமால் கோயிலில் சுந்தரபாண்டியன் சந்தி என்ற வழிபாடு நாள்தோறும் நடை பெறும் பொருட்டு, இவன் தென்னவன் சிற்றூர் என்ற ஊர் ஒன்றை இறையிலியாக அளித்திருத்தல் அறியத்தக்கது. இவன் அரசனால் வழங்கப்பெற்ற குருகுலத்தரையன் என்னும் பட்டம் பெற்றவன் ஆவன்.

2. கண்டன் உதயஞ்செய்தான் காங்கேயன்

இவன் சுந்தரபாண்டியனுடைய அரசியல் அதிகாரிகளுள் ஒருவன்; தேனாற்றுப் போக்கிலுள்ள நியமம் என்ற ஊரில் பிறந்தவன்; சிறுபெருச்சியூர்க் கொடிக்கொண்டான் பெரியான் ஆதிச்சதேவன் என்ற புலவன் பாடிய பிள்ளைத்தமிழ் பெற்றவன். அது காங்கேயன் பிள்ளைத்தமிழ் எனப்படும். அதற்குப் பரிசி லாகச் சாத்தனேரி என்ற ஊரில் அப்புலவர்க்கு இவன் இறையிலி நிலம் வழங்கியிருத்தல் குறிப்பிடத்தக்கதாகும்.3 3. திருக்கானப் பேருடையான் மழவச் சக்கரவர்த்தி

இவன் சுந்தர பாண்டியனுடைய அரசியல் அதிகாரிகளுள் ஒருவன்; இந்நாளில் காளையார்கோயில் என்று வழங்கும் ருக்கானப்பேர் நகரில் வாழ்ந்தவன்; மழவர் மாணிக்கம் என்று மக்களால் பாராட்டப்பெற்ற சிறப்புடையவன். இவனுக்குக் குருவாக விளங்கியவர் கவிராயர் ஈசுவரசிவ உடையார் என்பவர். வருக்குக் காணிக்கையாக இவன் நிலம் அளித்துள்ள செய்தி ஒரு கல்வெட்டால் அறியப்படுகின்றது. வன் அரசனால்

1. Ins. Nos, 554 and 575 of 1922; A.R. E. for 1923. part II paras 49 and 50.

2. Ins. 26 of 1926.

3. Ins. 75 of 1924.

4. Ins.47 of 1924; A. R. E. for 1924, part II, para 29.