உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




98

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

பாண்டிநாட்டை முன்போல் ஆட்சிபுரிந்து வரும்படி உதவி புரிந்தவன் போசள மன்னனாகிய வீரசோமேச்சுர னேயாவன். இவ்வுண்மையை, அப்போசள வேந்தன் தன்னைப் 'பாண்டியகுல சம்ரட்சகன்’1 எனவும், 'இராசேந்திரனைப் போரில் வென்றவன்" எனவும் தன் கல்வெட்டுக்களில் கூறிக் கொள்வதால் நன்குணரலாம். அதற்கேற்ப, இவ்விரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் போசளரின் ஆதிக்கமும் செல்வாக்கும் பாண்டி நாட்டில் மிகுந்திருந்தன என்பதை அந் நாட்டில் காணப்படும் சில கல்வெட்டுக்களால் அறிந்து கொள்ளலாம்.

இனி, இவன் தன் தலைநகராகிய மதுரையிலிருந்த சிங்காதனங்களுக்கு மழவராயன், பல்லவராயன் என்னும் பெயர்கள் வைத்திருந்தனன் என்பது கல்வெட்டுக்களால்' அறியப்படுகின்றது. இவனுடைய பட்டத்தரசி உலக முழுது டையாள் என்னுஞ் சிறப்புப் பெயருடையவள் என்று தெரிகிறது.

முதல் சடையவர்மன் சுந்தரபாண்டியன்

இவன் கி.பி. 1251-ஆம் ஆண்டில் முடிசூட்டப்பெற்று, இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இறந்த பிறகு பாண்டி நாட்டை ஆட்சிபுரிந்தவன்; சித்திரைத் திங்கள் மூல நாளிற் பிறந்தவன்;5 எடுப்பும் இணையுமற்ற பெருவீரன்; பாண்டிய இராச்சியத்தை யாண்டும் பரப்பி மிக்க உயர் நிலைக்குக் கொணர்ந்த பெருவேந்தன். இவன் கல்வெட்டுக்கள் வடக்கேயுள்ள நெல்லூர், கடப்பை ஜில்லாக்கள் முதல் தெற்கே யுள்ள குமரிமுனை வரையில் பரவியுள்ள பெருநிலப் பரப்பில் எங்கும் காணப்படுகின்றன. எனவே, நம் தமிழகத்திலும் அதற்கப்பாலும் வாழ்ந்த அரசர் பலர் இவனைப் பணிந்து திறை

1. Ep. Car., Vol, V, Ak. 125.

2. Ibid. No. 123.

3.S.I. I.,Vol. V, Nos. 427 and 448; Inscriptions of the Pudukkotai State, Nos. 340 and 341. திருமெய்யத்திலுள்ள இவ்விரு கல்வெட்டுக் களாலும் பாண்டிநாட்டில் அப்பகுதி, போசள வீர சோமேச்சுரன் ஆட்சிக்குட்பட்டிருந்தது என்று தெரிகிறது.

4. S. I. I., Vol. V, Nos. 446 and 421.

5. Ins. 28 of 1937-38.