உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




100

.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

பிறகு, இவன் சோழ அரசனை வென்று, தனக்கு ஆண்டு தோறும் திறை செலுத்திவருமாறு செய்தான். இவன் காலத்தில் சோழமண்டலத்தில் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தவன் மூன்றாம் இராசராச சோழன் மகனாகிய மூன்றாம் இராசேந்திர சோழன் ஆவன். அவன் ஆற்றலும் வீரமும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற வனெனினும், நற்காலமும் ஆகூழும் இன்மையின் இத்தகைய நிலையை யடைந்து சிறுமையுற்றனன் எனலாம். அவனோடு சோழர் ஆட்சியும் சோணாட்டில் முடிவெய்தியது. அவன் இறந்த பின்னர், சோழமண்டலம் பாண்டியர் ஆளுகைக்குட் பட்டுப் போயினமை குறிப்பிடத்தக்க தொன்றாம்.

பின்னர், இப் பாண்டிமன்னன் போசளரைத் தாக்கி அன்னோர் ஆட்சிக்குட்பட்டிருந்த சோணாட்டுப் பகுதியைத் தன்னடிப்படுத்த எண்ணினான்; அதனை நிறைவேற்றும் பொருட்டுப் பெரும் படையுடன் சென்று, அப் போசளர்க்குரிய நகரமாகத் திருச்சிராப்பள்ளிப் பக்கத்திலிருந்த கண்ணனூர்க் கொப்பத்தை' முற்றுகையிட்டான். அங்கு நடைபெற்ற பெரும் போரில் போசளத் தண்டநாயகன், சிங்கணன் முதலானோரும் மற்றும் போசள வீரர் பலரும் கொல்லப்பட்டனர். போசளரும் மூன்றாம் இராசராசசோழன் காலமுதல் தமக்குரியதாக வைத்திருந்த கண்ணனூர்க் கொப்பத்தை இழந்து விட்டனர்.

அந்நாட்களில் ஆட்சிபுரிந்த போசளமன்னன் வீரசிம்மன் மகனாகிய வீரசோமேச்சுரன் ஆவன். திருவரங்கத்திலுள்ள சுந்தரபாண்டியனது வடமொழிக் கல்வெட்டு' இவன் கர்நாடகதேயத்துச் சோமனை விண்ணுலகிற்கு அனுப்பினன் என்று கூறுகின்றது. அதில் சொல்லப்பட்ட சோமன், போசள வீரசோமேச்சுரனாக இருப்பினும் இருக்கலாம். அதனை உறுதிப் படுத்தற்குரிய ஆதாரங்கள் இப்போது கிடைக்கவில்லை. கண்ணனூர்க் கொப்பத்தில் நடைபெற்ற போரில் சேமன் என்பவன் ஒருவன் புறத்தே நண்பன்போலிருந்து உட்பகை,

1.

கண்ணனூர் என்பது இக்காலத்தில் சமயபுரம் என்னும் பெயருடன் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே ஏழு மைலில் உள்ளது. அங்குப் போசளேச்சுரம் என்ற சிவன் கோயிலும் இடிந்த கோட்டையும் இருத்தலை இன்றும் காணலாம்.

2. Ep. Ind., Vol. III, No. 2.