உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




132

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2 மதுரோதய வளநாடு, வரகுண வளநாடு, கேரள சிங்க வளநாடு, திருவழுதி வளநாடு, சீவல்லப வளநாடு, பராந்தக வளநாடு, அமிதகுண வளநாடு என்பனவாம்.

நாடுகளின் பெயர்களுக்கும் வளநாடுகளின் பெயர் களுக்கு முள்ள வேறுபாடு ஆராய்தற்குரியது. நாடுகளின் பெயர்கள் எல்லாம் ஊர்களின் அடியாகப் பிறந்தன என்பது உணரற்பாலது. கூற்றங்களின் பெயர்களும் அத்தைகையவே. ஆனால், பாண்டியர்களின் இயற்பெயர்களும் சிறப்புப் பெயர்களுமே வள நாடுகளின் பெயர்களாக அமைந்திருப்பது அறியத்தக்கது. சோழ மண்டலத்திலிருந்த வளநாடுகளின் பெயர்களும் இவ்வாறே சோழ மன்னர்களின் இயற்பெயர் களாகவும் சிறப்புப் பெயர்களாகவும் இருத்தல் ஈண்டு உணர்ந்து கொள்ளுதற்கு உரியதாகும்.

இனி, நாடுகளும் கூற்றங்களும் இக்காலத்துள்ள தாலூகாக் களுக்கு ஒப்பானவை என்றும், வளநாடுகள் ஜில்லாக்கள் போன்றவை என்றும், மண்டலம் மாகாணத்திற்குச் சமமானது என்றும் கொள்ளல் வேண்டும். 'பாண்டிமண்டலத்து மதுரோதய வளநாட்டுத் தென்கல்லகநாட்டுப் பராக்கிரம பாண்டியபுரம்’ என்பதால், இவை அந்நாளில் வழங்கிவந்த முறை நன்கு புலனகும். ஆயினும், வளநாட்டைப் பொருட்படுத்தாமல் நாட்டை மாத்திரம் குறித்து விட்டு ஊரை வரைவது பாண்டி மண்டலத்தில் பெரு வழக்காக இருந்தது என்பது அப்பக்கங் களில் காணப்படும் கல்வெட்டுக்களால் வெளியாகின்றது.' ஆனால், சோழ மண்டலத்தில், முதல் இராசராசசோழன் காலமுதல் வளநாடுகளைத் தவறாமல் குறித்துவிட்டுத்தான் நாடுகளையும் ஊர்களையும் எழுதிவந்தனர்.'

2. அரசனும் இளவரசனும்

இங்ஙனம் வகுக்கப் பெற்றிருந்த பாண்டி மண்டலத் திற்குப் பாண்டிய அரசனே தலைவன் ஆவான். அரசியலில் தலைமை வகித்து எவற்றிற்கும் பொறுப்புடையவனாய்

1. S.I,I. Vol. V. Nos. 293, 296,300, 331 and 302,

2. Ibid, Nos.456, 637, 640, 641, 976, 980 and 986.